வருணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 21:
{{Hinduism small}}
 
'''வருணன்''' அல்லது வருண தேவன் வேதகாலத்தில் மிகச் சிறப்புப் பெற்றிருந்த தேவர்களில் ஒருவன். வேதகாலத்தில் சிறப்புப் பெற்றிருந்த [[ஆதித்தர்கள்]] எனப்படும் பன்னிருவரில் ஒருவன். [[உலகம்]] முழுவதும் பரந்து இருப்பவன் இவன் என்று கூறப்படுகிறவன். வருணன் [[ஆகாயம்|ஆகாயத்தைக்]] குறிப்பவனாகவும், [[மேகம்]], [[மழை]], [[ஆறு]], [[கடல்]] போன்ற [[நீர்]] சார்பான அம்சங்களுடன் தொடர்பு படுத்தப்படுபவனாகவும் உள்ளான்.
 
அளவற்ற அறிவுத்திறனும், வலுவும் உள்ளவனாகப் புகழப்படும் இவன், உலகம் முழுவதையும் மேற்பார்வை செய்து வருவதாக அக்கால இந்துக்கள் கருதினார்கள். இதனால் வருணனை ஆயிரம் [[கண்]]கள் உடையவனாக இந்து சமய நூல்கள் சித்தரிக்கின்றன.
 
ஆரம்பகாலத்தில் இப் [[பிரபஞ்சம்]] முழுமையையும் ஆள்பவன் இவனே என்றும் கருதப்பட்டது. எனினும் [[வேதகாலம்|வேதகாலத்தின்]] பிற்பகுதிகளில் [[இந்திரன்]] சிறப்புப் பெறத் தொடங்கியபோது, வருணனின் முக்கியத்துவம் குறைந்து விட்டது எனலாம்.
==வருணன் தமிழர் தெய்வம்==
[[நெய்தல்]] எனப்படும் கடல் சார்ந்த நில மக்களின் தெய்வம் வருணன் எனத் [[தொல்காப்பியம்]] குறிப்பிடுகிறது. <ref>வருணன் மேய பெருமணல் உலகம் – தொல்காப்பியம், அகத்திணையியல் நூற்பா 5</ref>
 
[[பழையர்]] எனப்படும் குடிமக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் கடல் தெய்வத்துக்குக் காணிக்கையாகச் சொரிந்து வழிபட்டனர்.
 
யாழிசை கூட்டிக் கானல் வரி பாடிய [[மாதவி]] [[கோவலன்]] அல்லாத வேறொருவன் மேல் தான் காதல் கொண்டது போல் பாடிய பொய்ச்சூளைப் பொருத்தருளவேண்டும் எனக் கடல்தெய்வத்தை வேண்டித் தன் பாடலை முடிக்கிறாள். <ref>துயர் எஞ்சு கிளவியால் பூக்கமழ் கானலில் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடல் தெய்வம் நின் மலரடி வணங்குதும். – சிலப்பதிகாரம், கானல் வரி</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 38:
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
{{இந்து தர்மம்}}
 
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வருணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது