விளாதிமிர் லெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 25:
"லெனின்" என்பது் [[ரஷ்யப் புரட்சி]]க்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாடிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாடிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார். சில சமயங்களில் அவரை ''நிக்கலாய் லெனின்'' (Nikolai Lenin) என்று மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வர்ணித்தார்கள். ஆனால், சோவியத் யூனியனில் அவர் இப்பெயரினால் அறியப்படவில்லை.
 
லெனின் என்கிற அவருடைய பெயரின் மூலக்காரணம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. மேலும், அந்தப் பெயரினை எதற்காகத் தேர்வு செய்தார் என்று அவர் சொன்னதாக அறியப்படவில்லை. இப்பெயருக்கு [[லேனா நதி|லேனா]] என்கிற நதியின் பெயரோடு தொடர்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் முன்னணி ரஷ்ய மார்க்சியவாதியான ''ஜார்ஜி பிளிகானொவ்'' (Georgi Plekhanov) என்பவர் [[வோல்கா நதி]]யோடு தொடர்புடைய வோல்ஜின் என்கிற புனைபெயரினைக் கொண்டிருந்தார். லேனா நதி வோல்கா நதியை விட நீண்ட தூரம் ஓடுவதாலும் எதிர்த் திசையில் ஓடுவதாலும் லெனின் என்கிற பெயரினை லெனின் தேர்வு செய்வதற்கு காரணம் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் லெனின் பிளிகானொவின் எதிப்பாளர் அல்ல. மேலும், [[லேனா படுகொலைக்கு]] முன்னரே இப்பெயர் வழங்கப்படுவதால் அதற்கும் இப்பெயருக்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.
 
==ஆரம்பகால வாழ்க்கை==
வரிசை 33:
விளாடிமிர் லெனின் 22 ஏப்ரல் 1870ல் ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யனாவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் லெனினுக்கு இருந்தனர். இல்யா உல்யனாவ் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
 
இவருடைய தந்தையின் இறப்பிற்குப் பிறகு, அண்ணன் அலெக்ஸாண்டர் ஜார் மன்னனை கொல்ல முயன்றதுக்காக 1887 ஆம் ஆண்டு மார்ச் 1ம் நாள் கைது செய்யப்பட்டரார். அதனையடுத்து 1887 ஆம் ஆண்டு மே 8ம் நாள் ஜார் மன்னரின் காவல்துறையால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தார்.
 
===பல்கலைக்கழகம் மற்றும் அரசியல் தீவிரவாதம்: 1887-1893===
வரிசை 41:
{{double image|left|Marx6.jpg|135|Engels.jpg|140| [[கார்ல் மார்க்ஸ்]] (இடது) மற்றும் [[பிரெட்ரிக் எங்கெல்சு|பிரெட்ரிக் ஏங்கல்ஸ்]] (வலது) கோட்பாடுகளில் லெனின் தனது சகோதரர் போல் ஆர்வம் கொண்டார்}}
 
1887 ஆம் ஆண்டு கசான் பல்கலைக் கழகத்தில் லெனின் சேர்ந்தார், அப்பொழுது அன்னையுடன் சில்பர்க் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கினார். அங்கு தனது சகோதரர் அலெக்ஸாண்டரைப் போல தீவிரமான கருத்துகளை உடைய லாசர் போகோராக் (Lazar Bogoraz) உடன் சந்திப்பு நேர்ந்தது. லாசர் மக்கள் சுதந்திர கட்சி என்ற உழைப்பாளர்களின் நலன் சார்ந்த இடதுசாரி அமைப்பினை ஏற்படுத்தியிருந்தவர்.
 
லெனின் பல்கலைகழகத்தில் சட்டப்படப்பினை படித்தார். அப்பொழுது மாணவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார், இதனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக் கழகம் அவருக்கு படிப்பு தர மறுத்தது. இதனையடுத்து லெனின் தானே சட்டப்படிப்பினை ஒன்றரை வருடத்தில் படித்து தேர்ந்ததாக கூறப்படுகிறது.
 
'''தொழிலாளர் விடுதைலை இயக்கம்''' என்பதை தொடங்கி ரஷ்யாவில் தொழிலாளர்களிடையே காரல் மார்க்ஸின் கொள்கைகளை பரப்பரை செய்தார். 1895-ல் கைது செய்யப்பட்டு சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர் விடுதலையாகி வந்தது 1900ல். ஸ்பார்க் என்ற பெயரில் நாளிதழ் ஒன்றினை தொடங்கினார்.
 
விளாடிமிர் லெனின் தன் இளமைக் காலத்தில் நடாயா கிரூப்ஸ்காயா என்ற பள்ளி ஆசிரியயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரையும் ஜார் அரசு சைபீரியாவிற்கு நாடுகடத்தியது.
 
==பிப்ரவரி புரட்சி==
முதலாம் உலகப் போரினைத் தொடர்ந்து ரஷ்யாவில் தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். வறுமை, பட்டினி சூழ்ந்தது. இப் போரினை லெனின் போன்ற தலைவர்கள் கொள்ளக்காரப் போர் என்று வர்ணித்தனர். ஜார் மன்னருக்காக போராடிய தொழிலாளர்கள் தாங்கள் முதலாளிகளால் சுரண்டப்படுவதை லெனின் பிரட்சாரம் மூலம் அறிந்தனர். போரினை நிறுத்த மக்கள் அனுப்பிய மனுக்கள் ஜார் மன்னரால் நிராகரிப்பட்டதால், 1917ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களால் இப்புரட்சி நிகழ்த்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இப்புரட்சியால் ரஷ்யாவின் ஆட்சியை கைப்பற்றிய மிதவாத கம்யுனிஸ்டுகள் ஜார் மன்னரையும் அவரது குடும்பத்தினைரையும் சுட்டுக் கொன்றார்கள். இருப்பினும் உணவுப் பற்றாற்குறை ரஷ்யாவில் நிலவி வந்தது. <ref name=Info> http://inruoruthagaval.com/information-about-the-hero-of-the-revolution-lenin/</ref>
 
==அக்டோபர் புரட்சி==
வரிசை 56:
{{கம்யூனிசம்}}
 
அக்டோபர் புரட்சியானது (''October revolution'') 1917ல் நிகழ்த்தப்பட்ட பிப்ரவரி புரட்சியை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நடத்தப்பட்டதாகும். இது [[விளாடிமிர் லெனின்]], மற்றும் [[லியோன் ட்ரொட்ஸ்கி]] ஆகியோர் தலைமையில் [[போல்ஷெவிக்|போல்ஷெவிக்குகளால்]] நடத்தப்பட்டது. போல்ஷெவிக் புரட்சி என்றும் இப்புரட்சி அறியப்படுகிறது. இதன் மூலம் இடைக்கால ரஷ்ய அரசாங்கம் வீழ்ந்து 1918லிருந்து 1920 ரஷ்யா உள்நாட்டு கலகங்களை சந்தித்தது. அதன் பிறகு 1922ல் [[சோவியத் சமூகவுடைமைக் குடியரசுகளின் ஒன்றியம்|சோவியத் ஒன்றியம்]] அமைக்கப்பட்டது.
 
சிலர் இப்புரட்சியினை நவம்பர் புரட்சி என்றும் அழைக்கின்றனர். பிப்ரவரி புரட்சியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த மிதவாத கம்யுனிஸ்டுகளால் ரஷ்யாவில் பெரும் மாற்றம் நிகழவில்லை. இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி லெனின் தனது நண்பர்களால் உருவாக்கப்பெற்ற செம்படையினைக் (செஞ்சேனை) கொண்டு ரஷ்யாவினை கைப்பற்றினார். நவம்பர் 7-ஆம் நாள் தலைநகர் பெட்ரோகிராடை வளைத்த இப்படைகளைக் கண்டு இடைக்கால அரசின் வீரர்கள் விலகி நிற்க, வன்முறையில்லாமல் ரஷ்யா கம்யுனிஸ்ட் நாடாக மாறியது. <ref>Info</ref>
 
==மரணம்==
 
விளாடிமிர் லெனின் மீது 1918-ஆம் ஆண்டு துப்பாக்கி சூடு நடந்தது. அதை ஒரு ரஷ்யப் பெண் நிகழ்த்தினார். இருப்பினும் அந்நிகழ்வில் லெனின் உயிர் பிழைத்தார். 1922-ஆம் ஆண்டு லெனின் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டார். <ref>http: name="Info"//inruoruthagaval.com/information-about-the-hero-of-the-revolution-lenin/</ref> தனது 54-ம் வயதில் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் மூளை நரம்பு வெடித்து மரணமடைந்தார்.
 
==உடல்==
வரிசை 70:
சோவியத் யூனியன் உடைந்த பிறகு லெனின் உடல் முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை பரவலாக எழுந்தது. இதனைத் தொடர்ந்து விளாடிமிர் புடினின் ஆட்சிகாலத்தில் லெனின் உடல் அடக்கம் செய்யப்படுமென அறிவிப்பு வெளிவந்தது.
 
எதிர் கால விஞ்ஞான வளர்ச்சி இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமை அடையக்கூடும் என்று அப்போதைய பொதுவுடமை தலைவர்கள் கருதியமையால் லெனின் உடல் பாதுகாக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.
 
==நினைவிடம்==
வரிசை 93:
* [http://longlivelenin.blogspot.com இவர் தான் லெனின்]
* [http://pmgg.org/?p=10077 லெனினின் உடல் 88 வருடங்களுக்குப் பிறகு அடக்கம்]
 
 
 
[[பகுப்பு:1870 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்_லெனின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது