ஜான் வியான்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
{{தகவற்சட்டம் புனிதர்
|name=புனித ஜான் மரிய வியான்னி</br /> Saint John Baptist Mary Vianney
|birth_date={{birth date|1786|5|8|mf=y}}
|death_date={{death date and age|1859|8|4|1786|5|8|mf=y}}
வரிசை 29:
 
==தொடக்க காலம்==
ஜான் மரிய வியான்னி லயன்ஸ் நகருக்கு அருகில் டார்டில்லி என்னும் இடத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் மத்தேயு - மேரி என்ற பெற்றோருக்கு மகனாக 1786 மே 8ந்தேதி பிறந்தார். இவருக்கு 3 வயதாக இருக்கும்போது பிரஞ்சு புரட்சி வெடித்தது. இவரது குழந்தைப் பருவத்தில் அவருடைய பெற்றோர்கள் மட்டுமே மறைக்கல்வி கற்றுக்கொடுத்தனர். இவர் வாழ்ந்த சூழலில் திருப்பலியில் பங்கேற்பது எளிதானதாக இல்லை.
 
இருப்பினும் இரு துறவற சகோதரிகள் வியான்னியின் முதல் [[நற்கருணை]] விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அந்நிகழ்வு 1799ல் இவருக்கு 13 வயது நிகழ்ந்தபோது,<ref name="Walsh, Michael 1991">Walsh, Michael, ed. Butler's Lives of the Saints. (New York: HarperCollins Publishers, 1991), 236.</ref> அதிகாரிகளுக்குப் பயந்து மூடப்பட்ட ஓர் இல்லத்தில் நிகழ்ந்தது. இவர் தன்னுடைய தோட்ட இல்லத்தை ஒரு சிறுவர்களின் மறைக்கல்விக்கூடமாக மாற்றினார். நெப்போலியன் மன்னன் புரட்சியாளர்களைத் தோற்கடித்து திருத்தந்தையோடு உடன்படிக்கை செய்துகொண்டதால் கத்தோலிக்க மறை [[பிரான்சு]] நாட்டில் 1802ஆம் ஆண்டு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அப்பொழுது 16 வயதான வியான்னி, ஒரு குருவாக வேண்டும் என்று விரும்பினார்.
 
==குருப் பட்டம்==
மூன்று ஆண்டுகளுக்கு பிறகே, வியான்னியின் தந்தை இவரது விருப்பத்துக்கு இணங்கி தோட்ட வேலையிலிருந்து இவருக்கு விடுதலை அளித்தார். பிறகு இவர், தனது பங்குத்தந்தையே நடத்தி வந்த வகுப்புகளுக்கு சென்று குருத்துவப் பயிற்சி பெற்றார். அங்கு பயின்றவர்களிலேயே வியான்னிக்குதான் வயது அதிகம்; படிப்பிலும் கடைசி நிலையில் இருந்தார். இலத்தீன் மொழி கற்பது இவருக்கு மிகவும் கடினமாக இருந்தது; தன் தாய் மொழியான [[பிரெஞ்சு மொழி]]யிலும் போதிய அறிவு இல்லை. இவருடைய ஞாபக சக்தியும் மிகவும் பலவீனமாக இருந்தது. எனவே புனித ஜான் பிரான்சிஸ் ரெஜிஸ் என்பவருடைய திருத்தலத்திற்கு சென்று வேண்டினார். இவருடைய பங்குத்தந்தையின் ஆதரவே இவருக்கு ஊக்கம் ஊட்டியது.
 
1809-ல் நெப்போலியன் ஸ்பெயின் நாட்டின்மீது படையெடுத்தார். அப்பொழுது 23 வயதான வியான்னி, படையில் சேர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க விதி விலக்கு கேட்டார்; அது மறுக்கப்பட்டது.<ref>http://www.newadvent.org/cathen/08326c.htm</ref> எனவே வீரர் உடை அணிவிக்கப்பட்டு பிரணி மலைக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது அதிக மன வேதனை அடைந்தார். அங்கு இவர் சுகம் இல்லாதிருந்தபோது படையெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; படைகளுடன் சென்றபோது வழி தவறி நெப்போலியனுக்கு எதிரான மக்கள் வாழ்ந்த பகுதிக்குச் செல்ல நேர்ந்தது. எனவே அங்கு மக்களோடு இரண்டு ஆண்டுகள் தங்கிவிட்டார். பின்பு நெப்போலியன் உடன்பாட்டுக்கு பின்பு 1811-ல் அவர் வீடு திரும்பினார்.
வரிசை 63:
<references/>
{{கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி)}}
 
[[பகுப்பு:1786 பிறப்புகள்]]
[[பகுப்பு:1859 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_வியான்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது