"திவாகர நிகண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

464 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இந்நூல் 12 பிரிவுகளைக் கொண்டது. இதில் 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுளது. ஒவ்வொரு தொகுதியும், ஒரு பாட்டூடாகவே முற்றுப்பெறுகிறது. இந்நூலின் சிறப்புகளில் ஒன்று, இதில் பலபொருள் தரும் 384 சொற்கள் உள்ளன. மேலும் இந்நூலில் பெரும்பாலும் சங்க கால இலக்கிய சொற்கள் மிகுதியாகவும், பிற்கால சொற்கள் குறைவாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. [[தமிழ்|தமிழில்]] இன்றுள்ள [[நிகண்டு]]களில் இதுவே காலத்தால் முந்தியது.<ref>http://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412554.htm</ref>
 
{{dablink|சேந்தன் திவாகர நூலின் இரண்டு பகுதிகள் விரிவாகத் தொகுக்கப்பட்டு [[சொல் (பொருள், நிகண்டு-வழி)]] தொகுப்புப் பக்கத்தில் சுட்டப்பபட்டுத் தனிக் கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன.}}
 
இந்நூல் 12 தொகுதிகளைக் கொண்டது. கே. எஸ். ஸ்ரீநிவாசபிள்ளையும், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையும் இப்பாட்டுக்களில் சிலவற்றைத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளபோதும், அவற்றை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து எதனையும் கூறவில்லை. இவர்களின் பின்னர் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியவர்கள், இன்றுவரை இந்தப்பாட்டுக்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகளை எழுதவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1498046" இருந்து மீள்விக்கப்பட்டது