விஷூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விஷூக்கனியின் ஏற்பாடுகள்: கொன்னை + அக இணைப்பு உருவாக்கம்
வரிசை 62:
பிறகு ஒரு தட்டில் சிறிது அரிசி மற்றும் மலர்களுடன் வெள்ளி நாணயத்தை வைக்கின்றனர். கனி காணலுக்குப் பிறகு வேண்டியவாறு இந்த வெள்ளி நாணயத்தை எடுத்து பூ அல்லது தலை உள்ளதா என்பதைக் காண்கின்றனர். எப்பகுதி வருகிறதோ அதைக் கொண்டு ஒருவருடைய வேண்டுதல் நிறைவேறும் நிலையை அறிகின்றனர்.
பிறகு கனி உருளியை ஸ்ரீ கிருஷ்ண பகவானின் சிலைக்கெதிராகவோ அல்லது படத்திற்கு முன்னரோ (வட கேரளாவில் வால் கண்ணாடி உலக மாதா ஸ்ரீபகவதியைக் குறிக்கின்றது) வைக்கின்றனர். பிறகு [[கொன்றை|கொன்னைப்]]கொன்னைப் பூ கொண்டு கனி உருளி, படம் மற்றும் சுற்றுப்புறங்களை அலங்கரிக்கின்றனர். ஏற்றப்பட்ட நில விளக்கை (பித்தளை விளக்கு) இதற்கு அருகே வைத்து அதன் தங்க நிற ஒளிர்வை கனி பார்வைக்காக கூட்டுகின்றனர்.
 
இரண்டு தேங்காய் மூடிகளால் செய்யப்பட்ட தீபங்களும் உருளிக்குள் வைக்கப்படுகிறது. இதற்கான திரி கஞ்சி போடப்பட்ட துணியால் செய்யப்படுகின்றது. இது மேல் பாகம் நீளமாகவும் அடிப்பாகம் தடித்தும் வடிவமைக்கப்படுகின்றது. இதன் அடிப்பாகம் தீபமாகிய தேங்காய் மூடிக்குள் உள்ள தேங்காய் எண்ணெயில் வைக்கப்படுகின்றது. திரியின் மேல்பாகம் நேராக நின்று எரிகின்றது. இந்தத் தீபங்களை ஏற்றுவதன் மூலம் இறைவனை நம் வாழ்வில் அழைப்பதாகவும் ஆன்மீக ஞானத்திற்கு அதாவது அறியாமை இருட்டிலிருந்து நீங்கி வருவதற்கு ஏதுவாகவும் உள்ளதாக நம்புகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/விஷூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது