"பாக்கித்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== அரசியல் ==
அரசில் [[படைத்துறை|ராணுவத்தின்]] தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கித்தானின் படைத்துறையைச் சேர்ந்த [[பெர்வேஸ் முஷாரஃப்]] அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் - பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் [[ஆசிஃப் அலி சர்தாரி]] குடியரசுத்தலைவரகாக உள்ளார்.
 
== பொருளாதாரம் ==
பாக்கித்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று.பெரும்பாலும் [[அமெரிக்கா]]வை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது [[இராணுவம்|இராணுவபலத்தை]] பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. [[ஆப்கானித்தான்|ஆப்கனித்தானிலிருந்த]] [[தாலிபான் இயக்கம்|தாலிபான்களின்]] மீதான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] படையெடுப்பில் உதவுமுகமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு [[ஓப்பியம்]] போன்ற [[போதைப் பொருள்|போதைப்பொருட்கள்]] கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கித்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1499144" இருந்து மீள்விக்கப்பட்டது