"பிரபுல்லா சந்திர ராய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
ஆங்கிலப் பெயர் சேர்ப்பு
சி (clean up)
சி (ஆங்கிலப் பெயர் சேர்ப்பு)
'''பிரபுல்ல சந்திர ரே''' (''Acharya Prafulla Chandra Ray'' - வங்கமொழியில் - প্রফুল্ল চন্দ্র রায়)( [[ஆகஸ்ட்]] 2, [[1861]] - [[ஜூன்]] 16, [[1944]]) ஒரு வங்கக் [[கல்வியாளர்]], [[வேயிதியலாளர்]], வணிகர். சமூக சேவையாளர், ஆய்ர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். [[லண்டன்|லண்டனில்]] அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். [[இந்தியா|இந்திய]] [[வேதியியல்]] கழகத்தைத் தொடங்கியவர். [[இந்திய விடுதலைப் போர்|இந்திய விடுதலைப் போரில்]] பங்கு கொண்டவர். [[பாதரச நைட்ரைட்டு]] என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட [[சேர்மம்|சேர்மத்தைக்]] கண்டு பிடித்தவர்.
==வரலாறு==
பிரபுல்ல சந்திர ரே 1861-ல் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் நாள் மேற்கு வங்காளத்திலுள்ள குல்னா மாவட்டத்தில் (தற்போதைய வங்கதேசத்திலுள்ளது) ராகுலி-காட்டிபரா என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் '''ஹரிஷ் சந்திர ரே''' என்பவர். இவர் ஒரு பண்ணையார். [[வடமொழி]], [[பெர்சிய மொழி]], [[ஆங்கிலம்]] மூன்றிலும் புலமை பெற்றவர். ஆங்கில நாகரிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவருடைய சிந்தனைகள் பகுத்தறிவு அடிப்படையிலேயே அமைந்திருந்தன. சமுதாய நடவடிக்கைகள், [[இசை]], [[கல்வி]] இவற்றில் அதிக நாட்டம் கொண்டவர். எனவே, தனது மகன் 'பிரபுல்ல சந்திர ரே' வின் இளமைக் கல்வி தந்தையின் வழிகாட்டுதலின் படி சிறப்பாக அமைந்தது. ஒன்பது வயது வரை இவருடைய கிராமத்திலேயே கல்வி பயின்றார்.<br />
2,582

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1502852" இருந்து மீள்விக்கப்பட்டது