மீராபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
==கொலைமுயற்சி==
 
ஆரம்பம் முதலே இவரின் கிருஷ்ண பக்திக்கு இருந்துவந்த எதிர்ப்பு, அடுத்து பதவிக்கு வந்த போஜராஜன் தம்பியான விக்ரமாதித்யாவால் உச்சத்தை அடைந்தது. அந்தரங்கமான இவரின் பக்தி நாளடைவில் அரண்மனைவிட்டு சாதுக்களின் கூட்டத்தோடும் சாமான்யர்களோடும் தன்னைமறந்து ஆடுவதும் பாடுவதுமான போக்கினால், அரசகுடும்ப மதிப்பிற்கு களங்கம் வருமென எண்ணி விக்ரமாதித்யா தன் தங்கையான உதாபாயோடு சேர்ந்து பலமுறை மீராவை கொலைசெய்ய முயற்சித்தான். அவற்றில் குறிப்பிடத்தக்கவானாக கீழே உள்ளவை
 
கண்ணனுக்கு நிவேதனம் (படைத்த) செய்த பிரசாதத்தில் நஞ்சைக் கலந்து, அதனை மீராவை அருந்துமாறு செய்தான். பின்னர் கண்ணன் அருளால் நஞ்சு நீக்கப்பட்டதும்,
வரிசை 32:
 
கொடிய பாம்பு அடைத்த பூக்கூடையை கொடுத்து கண்ணனுக்கு அர்ப்பணிக்குமாறு கொடுக்க, அலங்கரிப்பதற்கு மீரா அப்பூக்கூடையை திறந்த போது அது அழகிய பூமாலை ஆனதும்,
 
==தேடல்==
 
பின்னாட்களில் குரு ரவிதாசரக்கு சீடரான இவர், அரசக் குடும்பத்தின் தொல்லைகள் தாளாது பல இடங்களுக்கு சென்றும் நிறைவுப்பெறாது இறுதியில் கண்ணன் வாழ்ந்த விருந்தாவனத்திற்கு (பிருந்தாவனம்) வந்தடைந்தார். அங்கு தன்னை [[கோபி]]கைகளில் ஒருவராக உணர்ந்த அவர் வட இந்தியா முழுதும் யாத்திரையாக சென்று தம் கருத்துகளை வட்டார மொழியான ‘பிரிஜ்’ மொழியில் பரப்பினார். பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியினின்று விடுபட்டு பேரின்ப நிலையை அடைய கிருஷ்ணபக்தி அவசியம் என்றார். இவரது பக்திப்பாடல்கள் இனிமையானவை. பக்தி நெறியைச் சுவையான பாடல்கள் வாயிலாகப் பரப்பினர். எளிய பக்தியும், நம்பிக்கையுமே வீடு பேற்றினை அடைய நல்வழி என்றார். பிறப்பால் எவரும் உயர்ந்தவர் இல்லை. உயர்விற்கு காரணம் “செயல்” என்னும் கருத்தைப் பரப்பினார்.
"https://ta.wikipedia.org/wiki/மீராபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது