எருமை (கால்நடை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
=== பால் சுரப்பு தடைபடுதல் ===
எருமைகள் பொதுவாகவே [[சுற்றுச்சூழல்]] மாற்றத்தைப் பொறுத்து எளிதில் பாதிப்படையக்கூடியவை. இவை பயந்தாலோ, ஏதேனும் வலி, மன அழுத்தம் ஏற்பட்டாலோ உடனே பால் சுரப்பு குறையும். ஏனெனில் மேற்கண்ட சூழ்நிலைகளின் போது அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கும். இது இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து மடிக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கிறது. மேலும் இந்த அட்ரினல் ஆனது அல்வியோலையின் மையோஎபிதீலியல் செல்களின் மீது செயல்புரிந்து, அவை ஆக்ஸிடோசினை எடுத்துக் கொள்ள முடியாமல் அடைத்து விடுகிறது. இதனால் பால் சுரப்பு தடைபடுகிறது. எனவே வலி, மனஅழுத்தம் ஏற்படா வண்ணம் எருமைகளை நன்கு கண்காணித்து சிகிச்சை அளித்தல்வேண்டும். பால் கறக்கும் நேரத்தை மாற்றிக் கொண்டே இருத்தல், தவறான கறக்கும் முறையைக் கையாளுதல், பால் கறக்கும் எந்திரத்தை சரியாகப் பொறுத்தாமை போன்றவையும் பால் சுரப்புக் குறைவுக்குக் காரணங்களாகும்.
 
===பால் கறக்கும் முறை===
மாட்டுடன் ஒப்பிடும் போது எருமையில் பால் கறப்பது கடினமான, மெதுவாகச் செய்யக்கூடிய செயலாகும். இதில் காம்புகள் சற்று தடிமனாக இருப்பதால் அதிக அழுத்தம் தேவைப்படுகிறது. பால் கறக்க எருமையில் ஆகும் நேரம் 2-10 [[நிமிடம்|நிமிடங்கள்]] ஆகும்.இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எருமையில் காம்பின் துளை சிறியது. அதிக ஆற்றல் செலுத்த வேண்டி இருக்கும். மாடுகளைப் போல் பால் முதலிலேயே குழாயில் சேகரித்து வைக்கப்பட்டிருக்காது. எனவே கறக்கும் போது தான் சிறிது சிறிதாக வெளிவரும்.
 
பால் கறக்கும்போது கொடுக்கும் [[அழுத்தம்|அழுத்தமானது]] சிறிது சிறிதாக அதிகரித்து பின்பு மெதுவாகக் குறைய வேண்டும். இந்த அழுத்தமானது கால்நடையைப் பொறுத்தும் பால் கறப்பவரைப் பொறுத்தும் வேறுபடுகிறது.சுரக்கும் பாலின் அளவு அதிகமாக இருக்கும் போது கறக்கும் வேகமும் அதிகரிக்கிறது. எனவே எருமை மாடுகள் வாங்கும் போது மடி, காம்பின் தன்மை போன்றவற்றைப் பார்த்து, கவனித்து வாங்குதல் வேண்டும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/எருமை_(கால்நடை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது