நெசவுத் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Parvathisriஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 56:
'''English Count (Ne) = No. of 840 yards in 1 pound of yarn'''
 
==தறி==
'''''தமிழகத்தில் நெசவு இயந்திரம் நவீனமயமாவதற்கு முக்கியத்துவம்: சைமா தலைவர் தகவல்''''
 
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியின் மூலம் நெசவு இயந்திரங்கள் நவீனமயமாவதற்கு முக்கியத்துவம் தரப்படுவதாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் டி.ராஜ்குமார் தெரிவித்தார்.
கோவை செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: நாட்டிலுள்ள பஞ்சாலைகளில் 47 சதவீதம் தமிழகத்தில் உள்ளன. தமிழகப் பஞ்சாலைகளில் சுமார் 20 சதவீதம் வரை நவீனப்படுத்தப்படுகின்றன.
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியில் இப்போது நெசவு இயந்திரங்களை நவீனப்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியில் நெசவு இயந்திரங்களை அமைப்பதற்குத் தரப்படும் 20 சதவீத மூலதன மானியம் 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழுப்பு நிறத் துணி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் உள்ளவர்கள் கைத்தறி மற்றும் விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
சீனாவில் ஷட்டில்லெஸ் தறிகள் இருப்பதால் துணி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மதிப்புக் கூட்டிய பொருள்களை உற்பத்தி செய்வதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சுமார் 25 சதவீதம் பேர் மதிப்புக் கூட்டிய பொருள்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துகின்றனர்.
நூல் பற்றாக்குறை இல்லை: இந்தியாவில் நூற்பாலைகளில் 5 கோடி கதிர்கள் உள்ளன. இதில் சுமார் 47 சதவீதம் தமிழகத்தில் உள்ளன. மாதத்துக்கு 33 கோடி கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் உள்நாட்டின் தேவை 20 கோடி கிலோ. 11 கோடி கிலோ ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதியுள்ளவை இருப்பில் இருக்கும். எனவே நூல் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.
நூல் ஏற்றுமதி: இந்தியாவில் நூல் ஏற்றுமதி தொடர்பான நிலையான கொள்கைகள் இல்லை. இதனால் நூல் ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்படும். இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்திய நூலை இறக்குமதி செய்து வந்த பலர், தற்போது வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர்.
பஞ்சாலைகள் துவக்க சலுகை: மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் புதிய ஜவுளிக் கொள்கைகளை அறிவித்துள்ளன. மகாராஷ்டிரத்தில் பஞ்சாலைகளைத் தொடங்குவோருக்கு வங்கி வட்டியில் 5 சதவீதத்தை மத்திய அரசும் மீதியை மாநில அரசும் ஏற்பதாக அறிவித்துள்ளன. இதுதவிர மூலதன மானியம், வரிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அடுத்த 2 ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தில் 30 லட்சம் கதிர்களும், குஜராத்தில் 35 லட்சம் கதிர்களும், பிற மாநிலங்களில் 30 லட்சம் கதிர்களும் கொண்ட பஞ்சாலைகள் தொடங்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 1.5 கோடி கதிர்களைக் கொண்ட பஞ்சாலைகள் தொடங்கப்படும். கோவையில் இருந்தும் சிலர் வெளி மாநிலங்களில் பஞ்சாலைகள் தொடங்க உள்ளனர்.
மின்னுற்பத்தி: சைமா சார்பில் தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் மூலம் சுமார் 250 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யவும், இதற்காக ரூ.1250 கோடி செலவாகும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சைமா 50 சதவீதம், மத்திய அரசு 30 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம் வழங்கும். இத்திட்டத்துக்கு விரைவில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி கிடைக்கும்.
கடலூரில் சைமா சார்பில் அமைக்கப்பட்டு வரும் பிராசஸிங் பூங்காவில் 40 சதவீத வேலைகள் முடிந்துள்ளன. அடுத்த ஆண்டு இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கடலில் செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் டி.ராஜ்குமார்.
 
==கைத்தறி நெசவு==
"https://ta.wikipedia.org/wiki/நெசவுத்_தொழில்நுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது