"பெரும் பூநாரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
==கூடு==
பூநாரைகள் கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் கூடு சேற்று மண்ணைக் குவித்து ஏற்படுத்தப்படுகின்றது.பூநாரை ஈரமான களிமண்னால் கூடு கட்டும். ஈரமான களிமண்ணைக் உயரமாகக் கூப்பி வைக்கப்பட்ட கிண்ணம்போல் இதன் கூடு இருக்கும். சூரிய வெப்பத்தால் உலந்து கெட்டியாக இதன் கூடு அடுப்பில் வைத்து சுட்டது போலவே நேர்த்தியாக இருக்கும் இது சுமார் 30 செ.மீ உயரமிருக்கும். இனச்சேர்க்கை முடிந்து, இதன் உச்சியிலுள்ள குழிவில் சராசரியாக ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடப்படும். முட்டையிட்டபின் ஆண், பெண் பூநாரைகள் இரண்டுமே ஒன்று மாற்றி ஒன்று அடை காக்கும். அடைகாக்கும் நாரை இதன்மேல் காலை மடக்கிக் கொண்டு தான் உட்கார்ந்து அடைகாக்கும்.
==குறைந்து வரும் பூநரைகள்பூநாரைகள்==
[[படிமம்:Flamingo at the Columbus Zoo.JPG|254px|thumb|right|பூநாரை]]
பூநாரைகள் உண்ணும் [[கூனிறால்]] -போன்ற ஒரு வகை கிரத்தேசிய உயிரினம் தான் இவற்றின் இளஞ்சிவப்பு நிறத்துக்கு காரணமாகும். பறவைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படும் பூநாரைகள் இந்நிறமற்று காட்சியளிப்பது நாம் அறிந்ததே. மாறிவரும் இயற்கை சமநிலை காலமாக இப்பறவையினம் குறைந்து கொண்டே வருகிறது. மகிழ்வூட்டும் இப்பறவைகளின் கோடியக்கரை வரத்து வருடாவருடம் குறைந்து கொண்டே வருகிறது.
2,582

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1505747" இருந்து மீள்விக்கப்பட்டது