டைனமைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ.தி
No edit summary
வரிசை 7:
</ol>]]
 
'''டயனமைட்டு''' என்பது (''Dynamite'') என்பது "தழைமவீருயிரகக் களிக்கரை''" (''நைட்ரோகிளிசரின்'') என்ற வெடி மருந்தினால் அமைந்தது. தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள் அல்லது மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற [[கரிமம்|கரிமப்பொருட்களை]] பயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் (less stable) இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. [[சுவீடன்|சுவீடனைச்]] சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான ''[[ஆல்பிரட் நோபல்]]'' என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன், [[செருமனி]]) என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை பெறப்பட்டது. இந்த வெடி வகை பொருளின் பெயர் ''டயனமிஸ்'' என்ற [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க]] வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகவும் இதன் பொருள் ''"ஆற்றலுடன் தொடர்புடையது''" என்பதாகும்.
 
டயனமைட்டு வழக்கமாக 8 அங்குலம் (20 செ.மீ) நீளமும் 1 1/2 அங்குலம் (3.2 செ.மீ) குறுக்கு விட்டமும், 0 5 பவுண்டு (0 .23 கி.கிராம்) அளவுகளில் குச்சியாக விற்கப்படுவதுண்டு.<ref name="Austin Blaster Guide">[http://www.austinpowder.com/BlastersGuide/docs/pib/Dynamite%20Series.PDF Austin Powder Guide, Dynamite series] page 2.</ref>. வேறு சில அளவுகளும் உள்ளன. நைட்ரோகிளிசரின் சார்புடைய டயனமைட்டின் தேக்க ஆயுள் (''shelf life''), தகுதியான தேக்க வரையறைகளுக்கு (''storage conditions '') உட்பட்டு அது உருவாக்கிய நாள் (''date of manufacture '') முதல் ஒரு ஆண்டு எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேக்க வரையறை என்பது தேக்க ஆயுளுடன் தொடர்புடைய நிபந்தனையாகும்.<ref name="Austin Blaster Guide" />.
 
டயனமைட்டு ஒரு வேதியியல் அதிர்வெடியாகும் (''high explosive''), இதன் பொருள் என்னவெனில் இது வெடிக்கும் தன்மையுடையது (''detonates'') அல்லது இது பளிச்சென்று எரியும் தன்மை (''deflagrates'') கொண்டதல்ல. மூநைதரோதுலுயீன் (மூ. நை. து.''trinitrotoluene'') (ட்ரைநைட்ரோடாலுவீன்அல்லது டி.என்.டி trinitrotoluene (''TNT'') என்ற பெருவிசை வெடி மருந்து வகை பொருள், வெடிக்கும் திறனை (ஆற்றலை) அளவிட உதவும் தர அளவீடாகும். டயனமைட்டின் வெடிக்கும் திறனோ ட்ரைநைட்ரோடாலுவீன் டி.என்.டி ஐ விட 60 % அதிகம்.
 
நைட்ரோசெல்லுலோசில் நைட்ரோகிளிசரின் கலந்து சிறிதளவு [[கீட்டோன்|கீற்றோன்]] சேர்க்கப்பட்ட கலவை டயனமைட்டின் மற்றொரு அமைப்பாகும். இந்த அமைப்பு கயிறுவடிவான புகையற்ற வெடிபொருள் (கார்டைட், cordite) போன்றது. இது முன் விவரித்த நைட்ரோகிளிசரின் மற்றும் டயட்டம் மண் போல் அபாயகரமானதாக இல்லாமல் பாதுகாப்புடன் உள்ளது. "படைத்துறை டயனமைட்டு" (''Military Dynamite'') நைட்ரோகிளிசரினை தவிர்த்ததாலும், நிலையான [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களை]] பயன்படுத்துவதாலும் பெரும் நிலைப்புத் தன்மையினை அடைகின்றது.<ref>{{citation |last=Ledgard |first=Jared |title=A Soldiers Handbook, Volume 1: Explosives Operations |url= http://books.google.com/books?id=U6f-Qlmm6zIC&pg=PA498&lpg=PA498&dq=Military+dynamite+TNT|year=2007 |isbn=0615147941}}</ref>. பொதுமக்களின் டயனமைட்டு பற்றிய அறிவு 'அரசியல் டயனமைட்டு' போன்ற [[உருவக அணி|உருவகங்களைப்]] பயன்படுத்தும் அளவுக்கு சிறந்துள்ளது.<ref>[http://www.theartnewspaper.com/article.asp?id=8618</ref>
வரிசை 23:
[[Image:AlfredNobel adjusted.jpg|left|thumb|150px|ஆல்பிரட் நோபல்]]
[[Image:Nobel patent.jpg|left|thumb|150px|நைட்ரோகிளிசரினுக்காக 1864 இல் [[ஆல்பிரட் நோபல்|ஆல்பிரட் நோபலின்]] காப்புரிமை விண்ணப்பம்]]
டயனமைட்டு, அல்பிரெட் நோபல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கரு மருந்தைவிட பாதுகாப்பாகக் கையாளும் தன்மையுடையது. நோபல், [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[1867]] ஆம் ஆண்டு [[மே]] மாதம் [[7]] ஆம் தேதி அன்று தன கண்டுபிடிப்பிற்கான காப்புரிமை பெற்றார். தொடர்ந்து [[சுவீடன்|சுவீடனில்]] [[1867]] ஆம் ஆண்டு [[அக்டோபர்]] மாதம் [[19]] ஆம் தேதி அன்று காப்புரிமை பெற்றார்<ref name=s&s-101>Schück & Sohlman (1929), p. 101.</ref> இவர் டயனமைட்டை ''நோபலின்”நோபலின் வெடி திறன்''திறன்” என்ற பெயரில் விற்றார். அறிமுகமான உடனேயே டயனமைட்டு, நைட்ரோகிளிசரின் மற்றும் கருமருந்தை விடவும், பரவலான பயன்பாட்டினைப் பெற்றது. நோபல் காப்புரிமையை திறம்படக் கையாண்டதால் உரிமம் பெறாத நிறுவனங்கள் மூடப்பட்டன. எனினும் சில அமெரிக்க வர்த்தகர்கள் சற்றே மாறுபட்ட கலவை முறையை காட்டி காப்புரிமை பெற்றனர்.<ref name="USPat 234489">US Patent 234489 issued to Morse 16 November 1880</ref>. இந்த கண்டுபிடிப்பு வன்முறையாளர்களைக் கொண்டாட வைத்தது.<ref>Palmer, Brian (2010-12-29) [http://www.slate.com/id/2279457/ What do anarchists want from us?], ''[[Slate.com]]''</ref>..
 
==உற்பத்தி==
[[File:Explosives Magazine, Ladyha.JPG|left|upright|thumb|ஸ்காட்லாந்தில், அய்ர்ஷயர், லட்யா கோலிரி என்னுமிடத்தில் உள்ள பழைய டயனமைட்டு கிடங்கு]]
வரி 31 ⟶ 32:
== தென்னாப்பிரிக்க குடியரசு==
 
[[தென்னாப்பிரிக்க]] [[குடியரசு]] தான், 1940 தொடங்கி பல பத்தாண்டுகளுக்கும் உலகின் மிக அதிக அளவில் டயனமைட்டு உற்பத்தி செய்த நாடாகும். இந்த நாட்டில் ''மேற்கு சாமேர்செட்டில்'' 1902 ஆம் ஆண்டு ''தே பீர்ஸ்'' (De Beers) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் பின்னாளில் ''ஆப்பிரிக்கன் எக்ஸ்புளோசிவ் மற்றும் செமிகல் (எ.இ.சி'') என்ற தொழிலகத்தால் ஏற்று நடத்தப்பட்டது. இந்நாட்டில் ''விட்வாட்டார்ஸ்ரண்டு''என்னுமிடத்தில் மிகுந்திருந்த தங்கச்சுரங்கங்களிலிருந்து டயனமைட்டுக்கான தேவை ஏற்பட்டது. மேற்கு சாமேர்செட் தொழிற்சாலை 1903 ஆண்டு உற்பத்தி தொடங்கி 1907 ஆண்டு அளவில் 340,000 கொள்கலப்பெட்டிகள் (ஒவ்வொன்றும் 22 கி.கிராம் (50 பவுண்டுகள்) அளவு கொண்டது) ஆண்டு தோறும் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் ''மோடர்போண்டின்'' என்ற போட்டி நிறுவனம் 200,000 கொல்கலப்பெட்டிகளை ஆண்டுதோறும் உற்பத்தி செய்தது.<ref>[http://www.caia.co.za/chsahs02.htm An MBendi Profile: South Africa - History of the Chemical Industry<!-- Bot generated title -->].</ref>.
 
டயனமைட்டு உற்பத்தி ஆபத்தானது. மேற்கு சாமேர்செட் தொழிற்சாலைகளில் 1960 ஆண்டுகளில் இரண்டு பெரிய வெடி விபத்துக்கள் ஏற்பட்டன. சில தொழிலாளர்கள் இறந்தனர். எனினும் உயிர்ச்சேதம் குறைவாக இருந்த காரணம் யாதெனில் தொழிற்சாலையின் கட்டக வடிவமைப்பும் (''modular design''), மண் அமைப்பும், மரம் வளர்ப்புமாகும். ''மோடர்போண்டின்'' தொழிலகத்தில் கூட முக்கியமில்லாத, கணக்கில் கொள்ளும் வகையில் சில வெடி விபத்துக்கள் நடந்தன. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் வலுக்கவே, 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு ''எ.இ.சி.ஐ'' படிப்படியாக டயனமைட்டு உற்பத்தியை குறைத்துக் கொண்டது. தொடர்ந்து இங்கு அம்மோனியம் நைட்ரேட்டு குழம்பைப் பயன்படுத்தி வெடிபொருள் உற்பத்தி செய்யப்பட்டது. இது ஓரளவு பாதுகாப்பனதாகவும் எளிதில் கையாளும் வகையிலும் அமைந்துள்ளது.<ref>[http://web.archive.org/web/20060630050905/http://www.aeci.co.za/New/History/1980.htm Historical Highlights 1980's].</ref>.
"https://ta.wikipedia.org/wiki/டைனமைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது