"புனலூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

122 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{ Infobox settlement
| name = புனலூர்
| native_name =
| footnotes =
}}
 
'''புனலூர்''' நகரம் [[இந்தியா]]வின் [[கேரளா]] மாநிலத்தில் [[கொல்லம்]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது [[தமிழகம்|தமிழக[[ கேரள எல்லையில் அமைந்துள்ள நகரம் ஆகும்.இது கல்லடா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயரான புனலூர் என்பது இரண்டு தமிழ் சொற்களிலிருந்து வந்தது. தண்ணீர் ஊர் என்பது இதன் பொருள் ஆகும் ( புனலூர்=புனல்+ஊர்:புனல்-தண்ணீர் , ஊர்- ஊர்).இது [[கொல்லம்]] நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர்கள் வடகிழக்கு திசையிலும் மாநிலத் தலைநகரான [[திருவனந்தபுரம்|திரிவனந்தபுரத்திலிருந்து]] 75 கிலோமீட்டர்கள் வடக்கேயும் அமைந்துள்ளது. இந்நகரம் பத்தனாபுரம் தாலுகாவின் தலைநகராகவும் விளங்குகிறது. இது மேற்குத் தொடர்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதை மேற்குத் தொடர்சி மலையின் நுழைவாயில் என்றும் சொல்வர்.
இது கொல்லம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும் . மேலும் தென் கேரளத்தின் 5 வது பெரிய நகரமும் ஆகும்.புனலூர் காகித ஆலைகளுக்கு புகழ் பெற்றது. கேரளாவின் முதல் தொழிற்சாலையான [[புனலூர் காகித ஆலை]] 1850-ல் நிர்மாணிக்கப்பட்டது. [[திருவாங்கூர்]] ஆட்சிக் காலத்தில் கொல்லம் மாவட்டத்திற்கும் தமிழகத்தின் [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]] நகருக்குமான போக்குவரத்திலும் , வணிகத்திலும் புனலூர் முக்கியப் பங்கு வகிக்தது. புனலூர் பஞ்சாயத்து 1972 நகராட்சியாக மாற்றம் பெற்றது.
 
==புவியியல் அமைப்பு==
[[File:Punalur ksrtcbustand.jpg|thumb|புனலூர் பேருந்து நிலையம்|401x401px]]
 
புனலூர் கடல் மட்டத்திலிருந்து 56 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது.<ref>Falling Rain Genomics, Inc - [http://www.fallingrain.com/world/IN/13/Punalur.html Punalur]</ref> கல்லடா ஆற்றைச் சார்ந்து பல சுற்றுலாப் பகுதிகள் இருக்கின்றன.<ref>[http://www.panoramio.com/photo/7000306 Panoramio - Photo of Amazing Punalur - Kakod Whitewater02<!-- Bot generated title -->]</ref> இங்கிருந்து செங்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 208 ( NH 208 ) 20 கிலோமீட்டர்கள் தொலைவில் கேரளாவின் முதல் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம் அமைந்துள்ளது. மேலும் பாலருவி இந்நகரிலிருந்து 35 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது<ref name=world>{{cite web | url = http://www.world-of-waterfalls.com/asia-palaruvi-falls.html | title = Palaruvi Falls | work = | first = | last = | publisher = World of Waterfalls | accessdate = 2010-06-26}}</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1508062" இருந்து மீள்விக்கப்பட்டது