"எரிவளிச் சுழலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,190 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
சூழ்வெளியில் இருக்கிற காற்றை உட்செலுத்தினால் காற்று அமுக்கியில் அதன் அழுத்தம் அதிகரிக்கும். இந்த உயரழுத்தக் காற்றை எரிப்பு அறைக்குள் செலுத்தி, அங்கே [[இயற்கை எரிவளி]] போன்ற எரிபொருளையும் கலந்து எரிக்கும்போது அதன் விளைவாக உயரழுத்த எரிப்பு வளிமங்கள் உருவாகும். அந்த எரிப்பு வளிமங்களைச் சுழலியினுள் செலுத்தி, அதன் தகடுகளால் வழிப்படுத்தினால் சுழலி சுற்றத் தொடங்கும். அவ்வாறு வெப்ப ஆற்றலை ஒரு [[வேலை]] செய்யப் பயன்படுத்திச் சுழல் ஆற்றலாய் மாற்றியபின் அந்தச் சுழல் ஆற்றலைப் பல வகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். காட்டாக, விமானங்கள், இரயில், கப்பல் முதலியனவற்றை இயக்கவும், ஒரு [[மின்னாக்கி]]யைப் (electrical generator) பயன்படுத்தி [[மின்னாற்றல்]] உருவாக்கவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
== வெப்ப இயக்கவியல் ==
எரிவழிச் சுழலியின் எளிய வரைபடத்தைப் பார்க்கவும்.
# சூழ் வெப்ப நிலையில் இருக்கும் காற்று, அமுக்கியின் உள்ளே செலுத்தப்படும். அமுக்கியில் வெப்பமூட்டுவதில்லை என்றாலும், காற்று அதிக அழுத்தத்திற்கு அமுக்கப் படுகிறது. இந்த அமுக்கத்தின் காரணமாக, வேறு வெப்பம் ஊட்டவில்லை என்றாலும் வெப்ப நிலையானது சற்று அதிகரிக்கிறது.
# பிறகு, "2" என்று குறிக்கப் பட்டுள்ள இடத்தில் உயரழுத்தக் காற்று எரிப்பகத்தினுள் செலுத்தப் படுகிறது. இதே இடத்தில் [[இயற்கை எரிவளி]] போன்ற எரிபொருளும் உட்செலுத்தப் படும். ஒரே அழுத்தநிலையில் காற்றும் எரிவளியும் சேர்ந்து எரியும். இதனால் உயரழுத்தத்தில் எரிப்பு வளிமங்கள் உருவாகும்.
# இவ்வாறு உருவான எரிப்பு வளிமங்கள் எரிப்பகத்தில் இருந்து வெளியேறி "3" என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் சுழலியின் வழியாகப் பாயும். இங்கே எரிப்பு வளிமங்களின் வெப்ப ஆற்றலானது ஒரு வேலையாக மாற்றப் படுகிறது.
 
[[பகுப்பு:இயந்திரப் பொறியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1512563" இருந்து மீள்விக்கப்பட்டது