திருவாதிரை நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''திருவாதிரை நோன்பு''' (விரதம்) என்பது [[திருவாதிரை (நட்சத்திரம்)|திருவாதிரை நட்சத்திரத்தோடு]] கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு [[நோன்பு|நோன்பாகும்]]. அத்துடன், [[திருவெம்பாவை]] வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. [[சிவன்|சிவனுக்குரிய]] நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் [[சிவபெருமான்|சிவனுக்கு]] மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ''ஆதிரையின் முதல்வன்'' என்றும் ''ஆதிரையான்'' என்றும் கூறுவர்.
== ஆருத்ரா தரிசனம் ==
வரிசை 12:
 
== சேந்தனார் வரலாறு ==
[[சேந்தனார்]] ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.
 
ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.
"https://ta.wikipedia.org/wiki/திருவாதிரை_நோன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது