பானுமதி ராமகிருஷ்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
}}
'''பானுமதி இராமகிருஷ்ணா''' பல மொழிகளில் நடித்த ஒர் இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரின் பெரும்பாலான திரைப்படப் பங்களிப்புகள் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]] மற்றும் [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]] மொழிகளிலேயே அமைந்திருந்தன. [[2003]]-ம் வருடம் திரைப்படத்துறைக்கு இவராற்றிய பங்களிப்பிற்காக [[பத்ம பூசன்]] விருது வழங்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டார்.
 
==பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை==
செம்படம்பர் 7 , 1925ஆம் ஆண்டு [[ஆந்திரா|ஆந்திராவில்]] உள்ள தோடவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் பானுமதி. அவர் சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய தந்தை அவருக்குக் கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்றுக்கொடுத்தார். தன் முதல் படத்திலேயே அவர் தியாகராஜ கீர்த்தனைகள் பாடிப் புகழ் பெற்றார் பானுமதி.<ref name = "தி இந்து">{{cite web | title = பானுமதி - முழுமையான சினிமா ஆளுமை | publisher = தி இந்து
| date = 11 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/article5224794.ece | accessdate = 12 அக்டோபர் 2013
}}</ref>
 
==திருமணம்==
1943 ஆம் வருடம் கிருஷ்ண பிரேமா படப்பிடிப்புக்காக சென்னை வந்தவர் ,அங்கு உதவி இயக்குனராக இருந்த பலுவை ராமகிருஷ்ணாவை சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். ஆனால் இவர்களின் காதலை பானுமதியின் பெற்றோர் எதிர்த்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஏ.ராமைய்யாவின் மனைவி கண்ணாமணி மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்..<ref name = "தி இந்து"></ref>
 
==திரைப்படத் துறை==
திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று பானுமதி முடுவெடுத்திருந்த நிலையில் , பி.என்.ரெட்டி தன்னுடைய ஸ்வர்க்க சீமா என்னும் படத்தில் பானுமதிதான் நடிக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டார். ராமகிருஷ்ணாவும் இதைக் கடைசிப் படமாக நினைத்து நடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் பானுமதி சம்மதித்தார். ஆனால் அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி பானுமதிக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது. அவர் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். தமிழில் ரத்னகுமார் படத்தில் பி.யூ.சின்னப்பாவுடனும், முக்தி படத்தில் தியாகராஜ பாகவதருடனும் இணைந்து நடித்தார்.1947இல் வெளிவந்த ரத்னமாலா பானுமதியும் அவர் கணவரும் இணைந்து தயாரித்த முதல் படம். 1952இல் அவர்கள் பரணி ஸ்டுடியோவைத் தொடங்கினர். பானுமதி இயக்கிய முதல் திரைப்படம் சண்டிராணி. இது தமிழ், தெலுகு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டது.<ref name = "தி இந்து"></ref>. 1992 ஆம் ஆண்டு வெளிவந்த 'செம்பருத்தி', தமிழில் அவரது கடைசிப் படம்.<ref>{{cite news
| title = Veteran actor-director P. Bhanumathi passes away
| newspaper = The Hindu
| date = 26 டிசம்பர் 2005
| url = http://www.hindu.com/2005/12/26/stories/2005122606471500.htm
| accessdate = 12 அக்டோபர் 2013 }}
 
</ref>
 
==விருதுகள் ==
பானுமதி 1966இல் [[தாமரைத் திரு|பத்மஸ்ரீ]], 2003இல் [[பத்மபூசன்]] ஆகிய விருதுகளால் கெளரவிக்கப்பட்டுள்ளார். தன் சினிமா பங்களிப்புக்காக பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.<ref name = "தி இந்து"></ref> தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியற்றியுள்ளார்.<ref>{{cite web | title = Department of Arts and Culture | url = http://artandculture.tn.gov.in/art-culture1.html
| accessdate = 12 அக்டோபர் 2013}}</ref>
 
==இறப்பு==
பானுமதி டிசம்பர் 25, 2005ஆம் ஆண்டு காலமானார்.<ref name = "தி இந்து"></ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றோர்]]
"https://ta.wikipedia.org/wiki/பானுமதி_ராமகிருஷ்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது