முதலாம் ஜூலியுஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up, adding வார்ப்புரு:S-rel)
==கிறித்து பற்றிய கொள்கையை விளக்குதல்==
 
இவரது பதவிக் காலத்தின்போது, இயேசு கிறித்துவின் இறைத்தன்மை பற்றிய விவாதம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. அதாவது, [[இயேசு கிறித்து]] இறைத்தன்மை கொண்டவர், கடவுளின் மகன் என்று [[நிசேயா நம்பிக்கை அறிக்கை|நிசேயா சங்கம்]] 325இல் அறிவித்திருந்தது. ஆனால் ஆரியுஸ் (''Arius'') என்பவர் இக்கொள்கையை ஏற்க மறுத்து, இயேசு கடவுளின் படைப்புகளில் மிகச் சிறந்தவரே தவிர கடவுள்தன்மை கொண்டவரல்ல என்று போதித்தார். இவ்வாறு அடிப்படைக் கொள்கை பற்றி ஐயம் எழுப்பப்பட்டதால், திருச்சபைக்குள் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
 
ஆரியுசின் ஆதரவாளர்கள் மேற்கு உரோமை மன்னராக இருந்த காண்ஸ்டன்ஸ் என்பவருக்கும் திருத்தந்தை ஜூலியசுக்கும் தங்கள் நிலையை விளக்கி உரைக்க தூதுவர்களை அரசின் கீழைப்பகுதியாக இருந்த காண்ஸ்டாண்டிநோபுளில் இருந்து அனுப்பிவைத்தனர். ஆரியுசின் கொள்கையைக் கடுமையாக எதிர்த்ததன் காரணமாக காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயர் அத்தனாசியுசு ஏற்கெனவே நாடுகடத்தப்பட்டிருந்தார். அவரை நாடுகடத்தியது சரியே என்று ஆரியுசின் ஆதரவாளர்கள் வாதாடினர்.
 
திருத்தந்தை ஜூலியுஸ் அத்தனாசியுசுக்குத் தம் ஆதரவைத் தெரிவித்து, இரு தரப்பினரும் ஒன்றுகூடிப் பேச வேண்டும் என்று முடிவுசெய்து ஒரு சங்கத்தைக் கூட்ட முயன்றார். ஆனால், ஆரியுசின் ஆதரவாளர்கள் அச்சங்கத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.
 
இரண்டாம் முறையாக நாடுகடத்தப்பட்ட அத்தனாசியுசு உரோமைக்கு வந்தார். அவரே காண்ஸ்டாண்டிநோபுளின் முறையான ஆயர் என்று திருத்தந்தை ஜூலியுஸ் தாம் கூட்டிய சங்கத்துக்குத் தலைமை தாங்கி அறிவித்தார். இந்த முடிவைக் கீழைச் சபையான காண்ஸ்டாண்டிநோபுள் பகுதியைச் சார்ந்த ஆயர்களுக்கு அறிவித்து, ஜூலியுஸ் கடிதம் அனுப்பினார். அதில், திருச்சபையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது தம்மோடு தொடர்புகொள்ளத் தவறியதற்காக ஜூலியஸ் அந்த ஆயர்களைக் கடிந்துகொள்கிறார் (''Epistle of Julius to Antioch, c. xxii'').
ஜூலியுஸ் 352, ஏப்பிரல் 12ஆம் நாள் உயிர்துறந்தார். அவருக்குப் பின் பதவி ஏற்றவர் திருத்தந்தை லிபேரியஸ் ஆவார்.
 
கத்தோலிக்க திருச்சபையில் திருத்தந்தை ஜூலியுஸ் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார். அவருடைய திருவிழா அவர் இறந்த நாளாகிய ஏப்பிரல் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
 
{{s-start}}
{{s-rel|ca}}
{{s-bef|before=[[மாற்கு (திருத்தந்தை)|மாற்கு]]}}
{{s-ttl|title=உரோமை ஆயர்<br/>[[திருத்தந்தை]]|years=337-352}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1516238" இருந்து மீள்விக்கப்பட்டது