பேச்சு:மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
::அந்த வாரமலர் இணைப்பு நான் மேற்சொன்ன வகையான தளங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு. அந்துமணி எழுதும் பத்தியில் (கவனிக்க: gossip column என்ற வகையான பத்தியில்) “குப்பண்ணா”, “லென்ஸ் மாமா” போன்றோர் ”அக்காலத்தில் என்ன நடந்தது தெரியுமா” என்று கூறும் கருத்துகளாகக் கூறியுள்ளனர். அந்துமணி எழுதிய அந்தக் கட்டுரை “ராஜாஜி தாமாக முன்வந்து பதவியைத் துறந்தார்” என்று எழுதுவதிலிருந்தே அந்த கிசுகிசு பத்தியின் பக்கச்சார்பு புலனாகிறது. இது முரசொலியில் மு. கருணாநிதி உடன் பிறப்புக்கு இன்று எழுதும் கடித்ததிற்கு சமானமானது. (”உடன்பிறப்பே அன்று ஆச்சாரியார் பார்ப்பன சதியால் திராவிடர்களைப் பாமரர் ஆக்கப் பார்த்தார்”). நெடுநாட்களாக இதன் ஆங்கில விக்கிக் கட்டுரை இப்படியான தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டு இரு தரப்பினரும் சண்டையிடும் இடமாக இருந்தது. எனவே தான் அரசு ஆவணங்கள். 1952-53 சட்டமன்ற விவாதங்கள், அக்கால இதழ் செய்திகள், ராஜாஜியின் பேரன் எழுதிய அவரது வாழ்க்கை வரலாறு போன்ற தரவுகளைக் கொண்டு இதனை மாற்றி எழுதினேன்.
::“தவறான வதந்தி” / “பிராமண சதி” என்ற இரு தரப்பு சார்பு நிலைகளை மீறி என்ன நடந்தது. (”ராஜாஜி இதை செய்தார், திமுக அதனை இப்படி வர்ணித்தது”) என்று எழுத வேண்டும். கட்டுரையின் முதல் பத்தியிலேயே “குலக்கல்வித் திட்டம்” என்பதே எதிர்ப்பாளர்கள் வைத்த பெயர் தான் என்பதைத் தெளிவு படுத்தி, பின் ராஜாஜி அரசு நடுவண் அரசின் கல்வித்துறைக்கு அளித்த அறிக்கையினைக் கொண்டே அப்படியே எழுதியிருக்கிறேன். இத்தமிழ்க் கட்டுரை சற்று சுருக்கி மொழிபெயர்க்கப்பட்டதால், (கட்டுரைப் போட்டிக்கும் 500 சொற்கள் உச்ச வரம்பு) இரு தரப்பு வாத விவாதங்கள் முழுமையாகத் தராமல் விட்டுவிட்டேன். மறுதரப்பை அளிக்க ஆங்கில விக்கியில் உள்ளது போல [https://en.wikipedia.org/wiki/Hereditary_education_policy#Defense_and_endorsements ஆதரவாளர் தரப்பினையும்] (நேரு, ராஜேந்திர பிரசாத் முதல் பருலேக்கர் குழு, நடுவண் கல்வி ஆலோசனை வாரியம்) வரை பலரும் ஆதரித்தனர்). மொழிபெயர்த்து விடலாம். இரண்டு மூன்று நாட்களில் செய்து முடிக்கிறேன்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 13:41, 13 அக்டோபர் 2013 (UTC)
Return to "மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்" page.