திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் அரசு சங்கச் சட்டவிதிப்படி 03-12-1956 அன்று ஆவணக் களத்தில் பதிவுசெய்யப்பெற்றது.
13-01-1957-இல் கூடிய, முதல் ஆண்டு நிறைவில்,ஒரு தீர்மானம் செய்தனர். ‘தமிழ்ச்சங்கம்’ முறைப்படி 11-03-1957 இல் தொடங்கப்பெற்றாலும்,திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்க நாளே, தமிழ்ச் சங்க தொடக்க நாள் என்று தீர்மானித்து, அதைப் பதிவு செய்தனர். அந்நாளில் ‘தமிழ்ச் சங்க ஆண்டு நிறைவுவிழா’ ஆண்டுதோறும் நடத்தவும் முடிவுசெய்தனர்.
==சங்கத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்==
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தின் முதல் தலைவர் செ.மு.அ.பாலசுப்பிரமணியம் செட்டியார் ஆவார். துணைத் தலைவர் வித்துவான் திரு.ஐயன்பெருமாள் கோனார் ஆவார். முதல் செயலாளர் திருவாளர் தெ.துரைராச பிள்ளை அவர்கள் பொருளாளர் திருவாளர் அ.இராம.சு.சுப்பையா செட்டியார் அவர்கள்..
தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்த, திருவாளர் செ.மு.அ.பாலசுப்பிரமணியம் செட்டியார் அவர்கள் தமது சொந்தப் பணிகள் காராணமாகத் தலைமைப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
02-10-1956 அன்று திருச்சிராப்பள்ளி, புகழ்பெற்ற மருத்துவர் எட்வர்டு பால்மதுரம் அவர்கள், தலைவராக அமர்ந்தார். திரு.தொ.மு.நல்லுசாமி அவர்களும் திரு.மு,அ.அருணாசலம் செட்டியார் அவர்களும் துணைத்தலைவர்களாக இருந்துள்ளனர்.
திருவாளர் தெ.துரைராச பிள்ளை அவர்கள் அமைச்சர் பொறுப்பில் தொடர்ந்தார். பேராசிரியர் வே.மா.சம்மனசு அவர்கள், துணைத் அமைச்சர் ஆனார். திரு.சு.இராம.சு.சுப்பையா செட்டியார் அவர்கள் பொருளாளர் ஆனார்.
==தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள்==
முதல் சிறப்பு நிகழ்ச்சி 1956 இல் நடைபெற்றுள்ளது. அதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தி.மூ.நாராயணசாமி பிள்ளை அவர்கள் தலைமை ஏற்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கட்கு, ‘முத்தமிழ்க் காவலருக்குப் பொற்பதக்கம் அணிவித்துப் பாராட்டினார்கள்.
திருச்சிராப்பள்ளியின் அப்போதையா மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஜனாப்.குலாம் முகம்மது பாட்சா அவர்கள் பரிந்துரையின்படி, தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி-மேலரண் சாலையில், கெயிட்டி திரையரங்கிற்கு முன் இருந்த இடத்தை 25-08-1959 – ஆண்டு, நிரந்தரக் கட்டிடம் கட்டிக் கொள்ள வழங்கியது. அப்பொழுது சென்னை மாநில முதல் அமைச்சராக இருந்த பெருந்தலைவர் மாண்புமிகு கு.காமராஜ் அவர்களால் 17-09-1959 அன்று தமிழ்ச்சங்க கட்டிடத்திற்கு கால்கோள் செய்து சிறப்பித்துள்ளார்.
எழிலான அனைத்து வசதிகளுடனும் கூடிய தமிழ்ச்சங்க கட்டிடத்தைப் பெருந்தலைவர், முதலைமைச்சர் கு.காமராஜ் அவர்கள் 07-05-1961 இல் திறந்து வைத்துள்ளார்கள். அப்பொழுது சென்னை மாநிலக் கல்வி அமைச்சராக இருந்த மாண்புமிகு எம்.பக்தவச்சலம் அவர்கள்,தமிழ்ச்சங்க நூல் நிலையத்தை 28-09-1961 அன்று வாழ்த்தி திறந்து வைத்துள்ளார்.
==பாராட்டு விழா==
தமிழ்ச்சங்கத்தில் 1967-இல் சென்னை மாநில முதல் அமைச்சரக இருந்த மாண்புமிகு அறிஞர் அண்ணா அவர்களுக்கு, ஒரு பாராட்டு விழாவில், வரவேற்பு அளித்து மகிழந்தது.
1973-ஆண்டு முதல் தமிழ்ச்சங்கத்தில் கல்வியில் பெரிய கம்பருக்குப் புகழ்விழா எடுத்துவருகின்றது.
1974 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் இணைவேந்தர் டாக்டர் இராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள் தலைமையில், தமிழிசை விழா நடைபெற்றது.
1975 ஆம் ஆண்டு திருசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவர்கள் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு பொற்கிழி ஆயிரம் வழங்கப்பெற்றது.
14-10-1979 ஆம் ஆண்டு மருத்துவமேதை ஜி.விசுவநாதம் பிள்ளை அவர்களால் தமிழ்ச்சங்கத்தில் முதல் தமிழ்ச்சங்க அமைச்சர் திருவாளர் தெ.துரைசாமிபிள்ளையின் திருவுருவச்சிலையினைத் திறந்து வைத்தார்.
28-11-1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மேலவைத் தலைவராக இருந்த மாண்புமிகு ம.பொ.சிவஞானம் அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றுள்ளது.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின், முதுமுனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களுக்கு சங்கத்தில் 22-12-1979 அன்று பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் நாடு முதல் அமைச்சராக இருந்த மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கு 24-05-1981 இல் போற்றுதல் விழா நடத்தப்பெற்றது.
தமிழ்நாடு முதலைமைச்சராக இருந்த மாண்புமிகு மு.கருணாநிதி அவர்களுக்கு உலகத திருக்குறள் மாநாட்டில், ஜனவரி 2000 ஆம் ஆண்டில் பாராட்டிதழ் வழங்கி மகிழ்ந்தது.
==மாத நிகழ்வுகள்==
தொடக்கத்தில் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தற்பொழுது வாரத்தில் புதன், வெள்ளி என இரண்டு நாட்கள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதில் தொடர்ந்து சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், பக்தி இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், புதினங்கள்,சிறுகதைகள், உரைநடை, ஒப்பிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் என்று வேவ்வேறான தலைப்புகளில் இரண்டு நாட்களிலும் மாலை 6-30 மணியிலிருந்து 7-30 வரை தவறாமல் இதுவரை நடந்து வருகிறது எனபது சிறப்பு.
 
தற்பொழுது(2013) சங்கத்தின் தலைவராக அறநெறி அண்ணல் சிவ.ப.மூக்கப்பிள்ளை அவர்களு அமைச்சராகப் புலவர் சி.சிவக்கொழுந்து அவர்களும் இருந்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
{{வார்ப்புரு:வேலை நடந்துகொண்டிருக்கிறது}}