சிறுத்தொண்ட நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
 
No edit summary
வரிசை 15:
பிள்ளையைக் கையிற்கொண்ட சிறுத்தொண்டர், அடியார்க்குக் கறியமுதாம் என்று மைந்தனை உச்சிமோவாது, மார்பிலணைத்து முத்தம் கொள்ளாது, அடியார்க்கு அமுதமளிக்க அடுக்களையிற் செல்லாது, வேறிடத்திற் செல்வாராயினார் ஒன்றிய உள்ளத்தாராகிய சிறுத்தொண்டரும் அவருடைய மனைவியாரும் தாம் செய்யப்போகும் செயலின் உண்மையினை உலகத்தார் உள்ளாவாறு அறியும் உணர்வுடையாரல்லர் என்று கருதி, மறைவிடத்திற் சென்று புகுந்தனர். பிள்ளையைப் பெற்ற தாயார் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். உலகை வென்ற தந்தையார் பிள்ளையின் தலையைப் பிடித்தார். மெய்த்தாயார் பிள்ளையின் கிண்கிணிக்கால் இரண்டினையும் மடியின் புடையில் இடுக்கிக் கொண்டார். அதனைக் கண்ட மைந்தன் பெற்றோர் முகம்நோக்கி மகிழ்ந்து நகைத்தனன். தனிமா மகனைத் தந்தையார் கருவிகொண்டு தலையரிவாராய் இருவர் மனமும் பேருவகை எய்தி அரியசெயல் செய்தனர். வெண்காட்டு நங்கையார், அறுத்த தலையின் இறைச்சி அமுதிற்கு ஆகாதென்று கழித்து அதனை மறைத்து நீக்குமாறு சந்தனத் தாதியார் கையில் கொடுத்துவிட்டு மற்றைய உறுப்புக்களின் இறைச்சிகளையெல்லாம் அறுத்துப் பாகம்பண்ணி வேறு கறிகளும் சமைத்துச் சோறும் சமைத்துக் கணவருக்குத் தெரிவித்தார்.
 
சிறுத்தொண்டர், ஆர்வத்துடன் விரைந்து சென்று திருவாத்தியின் கீழிருந்த பைரவ சுவாமிகளை வணங்கி, ‘தேவரீர் அடியேன் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்தருள வேண்டும்’ என்று ஆர்வத்தோடு அழைத்தார். ‘தேவரீர் பசித்தருளக் காலந்தாழ்த்தினேன் ஆயினும் தேவரீர் சொல்லியவண்ணம் திருவமுது சமைத்தேன். எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும்’ என வேண்டினார். வறியோன் இருநிதியும் பெற்று உவந்தாற்போல அடியவரைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்தார். வெண்காட்டு நங்கையார் கொணர்ந்த தூய நீரினால் அடியார் பாதங்களை விளக்கிய சிறுத்தொண்டர் அந்நீரை உள்ளும் பருகி புறம்பும் தெளித்தார். தூப தீபங் காட்டி வணங்கினார். மனைவியாருடன் அடியாரை வணங்கி நின்று ‘திருவமுது படைக்கும் வகை எவ்வாறு’ என வினவினார். ‘இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒப்படைக்க’ என்றார் பயிரவர். அவர் கூறிய வண்ணம் திருவெண்காட்டு நங்கையார் பரிகலந்திருத்தி வெண்துகில் விரிப்பில் செந்நெற்சோறும் கறியமுதும் படைத்தார். அதனைக் கண்ட பைரவர் அவரை நோக்கி, 'சொன்ன முறையிற் கொன்ற பசுவினது உறுப்பு எல்லாவற்றையும் கொண்டு சுவை நிரம்பக் கறியாக்கி வைத்தீரோ?' என்றார். தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாதென்று கழித்துவிட்டோம்' என்றார் வெண்காட்டு நங்கையார். 'அதுவும் கூட நாம் உண்பது' என்றார் பைரவர். அதுகேட்டுச் சிறுத்தொண்டரும் மனைவியாரும் திகைத்து நின்றனர். அப்பொழுது சந்தனத்தாதியார், 'அந்தத் தலையிறைச்சி, வந்த தொண்டர் அமுது செய்யும் பொழுது நினைக்கவரும் என்று முன்னரே கறியாக்கி வைத்துள்ளேன்' என்று சொல்லி எடுத்துக்கொடுத்தார். திருவெண்காட்டு நங்கையார் முகமலர்ந்து அதனை வாங்கிப் பரிகலத்திற் படைத்தார். அதன்பின் பைரவர், சிறுத்தொண்டரைப் பார்த்து 'இங்கு நமக்கு தனியே உண்ண ஒண்ணாது, இறைவனடியார் இப்பக்கத்தே உள்ளாரை அழைத்துவாரும்' என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர் 'அடியார் அமுது செய்ய இடையூறு இதுவோ' என்று வருந்தினார். வீட்டின் புறத்தே சென்று பார்த்தார். அடியார் ஒருவரையும் காணாது முகத்தில் வாட்டம் பெருக முதல்வரை வணங்கி 'இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன். நானும் [[திருநீறு]] இடுவாரைக் கண்டு இடுவேன்' என்றார். அதுகேட்ட பைரவர் 'உம்மைப்போல் நீறிட்டார் உளரோ? நீர் உடன் உண்பீர்', என்று கூறித் திருவெண்காட்டு நங்கையாரை நோக்கி, வேறொரு பரிகலம் இடச் செய்து 'வெம்மை இறைச்சிச்சோறு இதனில் மீட்டுப்படையும்' என்றார். அவரும் அவ்வாறே படைத்தார். உடனமைந்த சிறுத்தொண்டர், அடியாரை உண்பிக்கவேண்டி தாம் உண்ணப்புகுந்தார். அதுகண்ட பைரவர் அவரைத் தடுத்தருளி, 'ஐயா நாம் ஆறுமாதம் கழித்து உண்போம். நாம் உண்ணுமளவும் பொறுத்திராது நாளும் சோறு உண்ணும் நீர் முன்பு உண்பது ஏன்? நம்முடன் இருந்துண்ண மகவினைப் பெற்றீராயின் அம்மைந்தனை அழையும் என்றார். அதனைக் கேட்ட சிறுத்தொண்டர் 'இப்போது அவன் உதவான்' என்றார். நாம் உண்பது அவன் வந்தாலேதான் அவனை நாடி அழையும்' பைரவர். அச்சொற்கேட்டுத் தரியாது சிறுத்தொண்டர் மனைவியாரோடும் புறத்தே போய் அழைத்தனர். அவர் மனைவியாரும் தலைவர் பணியில் தலைநிற்பவராய் 'செய்மணியே! சீராளா! வாராய். சிவனடியார் நாம் உய்யும் வகையால் உடனுண்ண அழைக்கின்றார்' என்று ஓலமிட்டழைத்தனர். அப்பொழுது பரமன் அருளால் பள்ளிக்கூடத்தினின்று ஓடுவருபவனைப் போன்று சீராளதேவர் வந்தார். வந்த புதல்வரைத் தாயார் தழுவியெடுத்தார். 'சிவனடியார் அமுது செய்யப் பெற்றோம்' என்னும் மகிழ்ச்சியால் கணவர் கையில் கொடுத்தார்.
 
வந்த மைந்தரை அழைத்துக் கொண்டு அடியாரை அமுது செய்விப்பதற்கு உள்ளே புகுந்த சிறுத்தொண்டர் பைரவக் கோலத்தொண்டரைக் காணாதவராய்ச் சிந்தை கலங்கித் திகைத்து வீழ்ந்தார்; மனஞ்சுழன்றார். வெந்த இறைச்சிக் கறியமுதினைக் காணாது வெருவுற்றார். 'செய்ய மேனிக் கருங்குஞ்சுகத்துப் பயிரவர் நாம் உய்ய அமுது செய்யாது ஒளித்தது எங்கே?" எனத்தேடி மயக்கங் கொண்டு வெளியே சென்று பார்த்தார். அப்பொழுது மறைந்த அம்முதல்வர் உமையம்மையாரோடும், முருகனாகிய குழந்தையுடனும் விடை மீது அமர்ந்து இனிய கறியும், திருவமுதும் அமைத்தார் காண எழுந்தருளித் திருவருள் புரிந்தார். அன்பின் வென்ற தொண்டராகிய சிறுத்தொண்டரும், அவர் மனைவியாரும், சீராளதேவரும் தம் முன்னே தோன்றிய பெருமானை என்பும், மனமும் கரைந்துருக நிலமிசை வீழ்ந்து துதித்துப் போற்றினார்கள்.
 
[[சிவபெருமான்]], உமாதேவியாரும், [[முருகன்|முருகவேளும்]], அங்குத் தம்மை வழிபட்டு நின்ற சிறுத்தொண்டர், மனைவியார், மகனார், தாதியார் நால்வரையும் தம்மை என்றும் பிரியாது இறைஞ்சியிருக்கும் வண்ணம் உடன் கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினார்.
 
==நுண்பொருள்==
#குடிக்கொரு புதல்வனை மகிழ்ச்சியான மனத்துடன் குரூரமாகக் கொன்று உறுப்பரிந்து கறியமுது செய்யும் வல்வினை செயற்கரியதும் காரணம் காண்டற்கரியதுமான சிவத்தொண்டேயாகும். அது ஈசனடியார்க்காயின் எச்செயலும் அரியதில்லை எனக் காணும் உறைத்த மெய்த் தொண்டர்க்கு மிக இயல்பாக கைவரும் கருமமுமாகும்.
#கல்வி, வீரம், செல்வம், அரச அதிகாரம், சிவபக்தி என்பவற்றில் சிறந்திருக்கும் பெரியோர் சிவனடியாரிடத்தில் சிறிய தொண்டராய் பணிந்து நடப்பார்கள்.
#சிவதொண்டியற்றுவார்க்கு நேரும் சோதனைகள் அவர்தம் இயல்புக்கு ஏற்ற வண்ணெமே அமையும், போர்க்களத்தில் கொலைத்தொழில் செய்யவல்ல தொண்டர்க்கு அவ்வண்ணமே ஒரு சோதனை நேர்ந்தது. சோதனை அளிக்க வரும் பெருமானும் அதற்கேற்ற கோலம் பசு இறைச்சி வேண்டுதற் ஏற்ற ஒரு கோலமே.
#அரசரானவர் தொண்டுறுதிபடைத்தோரை அத்தொண்டுறுதி துலங்கும் வண்ணம், இயன்ற வசதிகள் அளித்து அரச கருமத்தின்றும் ஓய்ந்திருக்கச் செய்தல் சிறந்தது.
#அருள் தருதற்குப் பெருமாள் கொள்ளும் கோலம் அன்பர் நிலைக்குப் பொருந்தியதாக அமையும். சிறுத்தொண்டர், வெண்காட்டு நங்கை, சீராளர் என்போர்க்கு அருள்புரிய கொண்டகோலம் சோமாஸ்கந்த மூர்த்தமாயிருந்தல் காண்க. சந்தனாசிரியருக்கும் திருவடிப்பேறு அருளியமையும் சிறப்பே.
#சோதனைகள் எல்லாம் வரப்பிரசாதமாக நிறைவுறும்
 
சிறுத்தொண்ட நாயனார் குருபூசை : சித்திரைப் பரணி
 
==உசாத்துணைகள்==
#பெரிய புராணம் வசனம் - [[சிவதொண்டன் சபை]], [[யாழ்ப்பாணம்]]
 
{{stub}}
 
----
"https://ta.wikipedia.org/wiki/சிறுத்தொண்ட_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது