"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

(தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையுடன் கூடிச் செயற்படலாம்.)
 
herbert என்று தேடினால் பல்வேறு விதமான எழுதுமுறைகளைக் காண்கிறோம். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3ASearch&search=herbert+]. எது சரி? (அவற்றில் எதுவுமே சரியாக எனக்குப் படவில்லை!) அறிந்தவர்கள் '''மேற்கோள்களுடன்''' தெளிவுபடுத்தவும்.--[[பயனர்:பரிதிமதி|பரிதிமதி]] ([[பயனர் பேச்சு:பரிதிமதி|பேச்சு]]) 17:37, 14 அக்டோபர் 2013 (UTC)
:பரிதிமதி, Herbert என்பது பிரான்சியப் பெயரானால் அதன் ஒலிப்பு எபேர் (H பிரான்சியத்தில் கிடையாது அவர்கள் ஒலிப்பதும் இல்லை. கடைசி t என்ப்தையும் இப்பெயரில் அவர்கள் ஒலிப்பதில்லை). ஆங்கிலம்-இடாய்ச்சு எனில் அவர்களின் ஒலிப்பு ஃகெர்பெர்ட்(டு) (ட் என்று எந்த மொழியாளராலும் சொல்லி நிறுத்தவே முடியாது; அடுத்து சிறு துணை உயிரொலி வந்தே நிற்கும்). இதனைத் தமிழில் எர்பர்ட்டு (எபர்ட்டு) என்றோ எர்பெர்ட்டு (எபெர்ட்டு) என்றோ சீராக வழங்குதல் வேண்டும். ஆனால் இவ்வகையான ஒழுக்கங்களைக் கைக்கொள்ளும் உளப்போக்கு பலரிடம் இல்லாதது பெரும் சிக்கலாக உள்ளது. ஆகவே பிரான்சிய மொழிச்சொல்லானால் எபேர் என்றும் ஆங்கிலம் போன்ற மொழிச்சொல்லானால் எர்பெர்ட்டு என்றும் எழுதலாம் என்பது என் கருத்து. (இது இங்கு பேசாமல் வேறு இடத்தில் பேச வேண்டிய ஒன்றாக இருப்பின், அங்கு படிஉஎடுத்து இடலாம்). இவற்றை நான் நேரடியாக 20-25 ஆண்டுகளாகக் கேட்டிருக்கின்றேன். என் நண்பர்கள் சிலரின் பெயரும் இது (பிரான்சிய நண்பரும் பிற நண்பரும்). புறவயமான மேற்கோள்: [http://www.pronouncenames.com/herbert இங்கும்] [http://inogolo.com/pronunciation/Hebert இங்கும்] காணலாம். --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 14:39, 16 அக்டோபர் 2013 (UTC)
 
==சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்==
[https://ta.wikinews.org/s/6hu சேலம் சுழற்சங்கத்தில் விக்கிப்பீடியா குறித்து 20.09.2013 அன்று] எடுத்துரைத்ததன் விளைவாக, [[விக்கிப்பீடியா:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்|சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்]] 26.10.2013 அன்று நடைபெற உள்ளது. இப்பயிலரங்கிற்கு பெரியார் பல்கலைக்கழகமும், சேலம் சுழற்சங்கமும் தன் முழு ஒத்துழைப்பை வழங்கிள்ளது. பயிலரங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் தனித்தனி கணினியுடன், இணைய இணைப்புடன் இந்த நிகழ்ச்சி அணியப்படுத்தப் பெற்றுள்ளது. இந்நிகழ்வில், பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயரை [http://www.thamizhagam.net/wikipedia/news.html தமிழகம்] தளத்திலோ அல்லது 9750933101, 9442105151 ஆகிய எண்களிலோ தங்களின் பெயரைப் 21.10.2013 க்குள் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம். பெயர்ப்பதிவு நிகழ்வை ஒருங்கிணைக்க உதவும்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 19:31, 15 அக்டோபர் 2013 (UTC)
21,062

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1519911" இருந்து மீள்விக்கப்பட்டது