விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎கருத்து: *விரிவாக்கம்*
வரிசை 95:
::உழவன், குணம் நாடியே அனைவரும் வாக்கிட்டுள்ளனர். எனவே, நிருவாகப் பொறுப்புக்கு வர இருப்பவர் என்ற முறையில், Tamil23யின் கூற்று குறித்து உங்கள் விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன். இதே போன்ற ஒரு எதிர்ப்பு இன்னொரு பயனருக்கு வருமெனில் உங்கள் நிலைப்பாடு எத்தகையதாக இருக்கும்? நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:54, 16 அக்டோபர் 2013 (UTC)
:::தகவல் உழவனின் உழைப்பை யாருமே மறுக்க முடியாது. அவருடைய ஆர்வத்தையும் யாரும் மறுக்க முடியாது. கணினி இல்லாமலே உழைத்த நாள்களில் இரவியும் சுந்தரும் நானும் இயன்ற வழிகளில் எல்லாம் த.உழவனுக்கு உதவியும் இருக்கின்றோம். ஆனால் இன்னும் அவர் விக்கியின் கொள்கைகளைச் சரிவர உள்வாங்கவில்லை, பொறுப்புணர்வு-முதிர்ச்சி (உடன் பணியாற்றும் பங்களிப்பாளர்களுடன் உரையாடும் பாங்கு) எய்தவில்லை என்பதே என் மெய்யான கணிப்பு. அவருக்கு நிருவாக அணுக்கம் மறுப்பதால் (அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதாகக் கொண்டால்) பெரிதாக எதுவும் நன்மை நடக்கப்போவதில்லை, தடுக்க என் கருத்துகளை இடவும் இல்லை, அதனால்தான் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை, ஆனால் நிருவாக அணுக்கம் பெறும் ஒருவர் பிற பங்களிப்பாளர்களை எள்ளி நகையாடாமல் பண்புடன் தன் எதிர்க்கருத்துகளை முன்வைக்கும் பக்குவமும், இணக்கமான முடிவுகள் நோக்கி நகரும் இயல்பான முதிர்ச்சி நிலையும் கொண்டிருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. இது தமிழ் விக்கிப்பீடியா என்றாலும், தமிழ் விக்சனரியில் தகவல் உழவன் அவர்கள் பல நேரங்களிலும் நடந்துகொண்ட விதம் மிகவும் வருந்தத்தக்கது. அங்கே பங்களிக்கவே எனக்குத் தயக்கமாக உள்ளது. அதனால் ஒதுங்கிப் போகவில்லை, பங்களிப்பைக் குறைவாகச் செய்கின்றேன். இப்பண்புகள் ஒரே நாளில் மாறுவன அல்ல. ஆனால் என் வேண்டுகோள், மெள்ள மெள்ளவாவது நாம் எல்லோரும் நண்பர்களே, எல்லோரும் அவரவர்களுக்குத் தெரிந்தவாறு பங்களிக்கின்றோம், ஒரே உயர் நோக்கிற்காக உழைக்கின்றோம். ஒருவருக்கு ஒருவர் ஏவலாள் அல்லர் (!!), ஆகவே உடன்பங்களிப்பாளர்களுடன் பண்புடன் பழகுவோம் என்னும் முதிர்ந்த நல்லுணர்வு கொள்ளப்பழகவேண்டும். இவ்வணுகுமுறை த.வி-யி சீரான வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்று. சுந்தர் கீழே குறிப்பிட்டவாறு போகப்போக நாம் பண்படுவோம். த. உழவனுக்கு நிருவாகப் பொறுப்பை மறுப்பதால் (மறுக்கும் நிலை இருப்பதாக நினைத்தால்) என்ன நற்பயன் விளையப் போகின்றது? ஏதும் அதிகம் இல்லை. எனவே அவருக்கு இந்த நிருவாகப் பொறுப்பை அளிக்கப் பொறுப்பாளர்கள் முன்வரவேண்டும் என்றே விரும்புகின்றேன், ஆனால் த.உழவன் மேலே சொல்லியுள்ளவற்றைச் சரிவர உள்வாங்கி நடந்துகொள்வார் என்று எதிர்பார்ப்போம். இக்கூற்றுகள் யாவும் நன்னோக்குடனும் உண்மையுடனும் கூறுகின்றேன் என்பதையும் அவர் உணரவேண்டும். --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 15:34, 16 அக்டோபர் 2013 (UTC)
{{விருப்பம்}}--[[பயனர்:Yokishivam|யோகிசிவம்]] ([[பயனர் பேச்சு:Yokishivam|பேச்சு]]) 15:43, 16 அக்டோபர் 2013 (UTC)
# விக்கிமீடியாவின் அடிப்படை நோக்கத்தைப் புரிந்து, உலகோடு ஒத்து நோக்கி, இங்கு எழுதப்படும் ஆக்கங்கள் மற்றவருக்கு உதவ வேண்டும் என்கிற பண்புடன் செயல்படும் பண்பாளர் --[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 04:56, 13 அக்டோபர் 2013 (UTC)
#:தங்களுடன் நடந்த உரையாடலுக்குப் பிறகு, w3schoolஇணையத்தில் கற்கத் தொடங்கியுள்ளேன். தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியமைக்கு நன்றி--≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> ''( கூறுக )'']] </font></sup> 03:00, 16 அக்டோபர் 2013 (UTC)