"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

[https://ta.wikinews.org/s/6hu சேலம் சுழற்சங்கத்தில் விக்கிப்பீடியா குறித்து 20.09.2013 அன்று] எடுத்துரைத்ததன் விளைவாக, [[விக்கிப்பீடியா:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்|சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்]] 26.10.2013 அன்று நடைபெற உள்ளது. இப்பயிலரங்கிற்கு பெரியார் பல்கலைக்கழகமும், சேலம் சுழற்சங்கமும் தன் முழு ஒத்துழைப்பை வழங்கிள்ளது. பயிலரங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் தனித்தனி கணினியுடன், இணைய இணைப்புடன் இந்த நிகழ்ச்சி அணியப்படுத்தப் பெற்றுள்ளது. இந்நிகழ்வில், பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயரை [http://www.thamizhagam.net/wikipedia/news.html தமிழகம்] தளத்திலோ அல்லது 9750933101, 9442105151 ஆகிய எண்களிலோ தங்களின் பெயரைப் 21.10.2013 க்குள் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம். பெயர்ப்பதிவு நிகழ்வை ஒருங்கிணைக்க உதவும்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 19:31, 15 அக்டோபர் 2013 (UTC)
:கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளைக்கும் நமக்கும் நல்ல புரிதல் உள்ளது. அவர்களின் பல பரப்புரைகளில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான இடத்தைத் தருகிறார்கள். இது போல் நாமும் இயன்ற இடங்களில் அவர்களுக்கான களத்தைப் பெற்றுத் தருவது சிறப்பாக இருக்கும். மலையாள விக்கிப்பீடியர்கள் இவ்வாறு கட்டற்ற மலையாளக் கணிமை அமைப்புடன் சேர்ந்தியங்குவதைக் காண முடிகிறது. நாமும் ஒத்த கருத்துள்ள கூட்டாளிகளைப் பெற்றுக் கொள்வது நமது வீச்சைக் கூட்டுவதாக இருக்கும். மேற்கண்ட நிகழ்வில் கட்டற்ற மென்பொருள்கள், அதன் மூலமான வேலைவாய்ப்புகள் பற்றி ஒரு மணி நேரம் பேச வாய்ப்பு தந்தால் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இயலும் என்றால், கட்டற்ற மென்பொருள் இயக்க நண்பர்களைத் தொடர்பு கொள்ளச் செய்கிறேன். வருங்காலத்தில் நாம் ஈடுபடும் பரப்புரை முயற்சிகளிலும் இதனைக் கருத்தில் கொள்ளலாம். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:14, 16 அக்டோபர் 2013 (UTC)
::மிகுந்த பயனளிக்கும் செய்தி. கட்டற்ற மென்பொருள் இயக்க நண்பர்களைத் தொடர்பு கொள்ள ஏதுவான பேசி எண்ணை அளிக்க விழைகின்றேன்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 17:55, 16 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1520377" இருந்து மீள்விக்கப்பட்டது