விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கருத்து: *மறுமொழி*
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 311:
:உங்கள் பரிந்துரைகளை வரவேற்கிறேன், சுந்தர். ஒரு பயனரைப் பற்றி சரியாக அறியாத போது, வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்கும் தெரிவும் உண்டு என்பதைத் தெளிவுபடுத்தலாம். தற்போது, பெருவாரியான நடுநிலை வாக்குகள் பயனரைப் பற்றி அறியாமல் அளித்த வாக்குகளே. வாக்களிப்போர் பயனர்களின் பங்களிப்புகளைச் சரி பார்த்து அதன் அடிப்படையிலும் தங்கள் கேள்விகள், ஐயங்களைக் கேட்டுத் தெளிந்து அதன் அடிப்படையிலும் வாக்களிக்கலாம். அதே போல் வெறுமனே, ஆதரவு / எதிர்ப்பு / நடுநிலை என்று வாக்கிடாமல் ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் தனித்துவமான கருத்துகளை முன்வைத்து வாக்கிடும் முறையையும் வலியுறுத்தலாம். தற்போது நடைபெறும் தேர்தல் முடிந்தவுடன் இது போன்ற பரிந்துரைகைளை இறுதி செய்யலாம். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 19:01, 15 அக்டோபர் 2013 (UTC)
::நன்றி இரவி. ஆம், ஒருவரைப்பற்றித் தெரியாதவிடத்தில் வாக்களிக்காமலேயே இருந்துவிடலாம் என்ற வாய்ப்பையும் தெளிவுபடுத்த வேண்டும். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 07:19, 16 அக்டோபர் 2013 (UTC)
 
மதிநுட்பமாக அணுகிய சுந்தருக்கும், பொது நோக்கும் நடுநிலை நோக்கும் கொண்ட ஏனைய விக்கியர்களுக்கும் பாரட்டுக்கள்! எதிர்ப்பு வாக்களித்தவன் என்பதால் என் கருத்தைப் பொதுவாக வைக்கிறேன்.
 
இங்குள்ள யாருக்கும் நான் எதிரானவன் இல்லை. விக்கியில் விசமத்தனம் செய்யும் ஆர்வமும் எனக்கில்லை. தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும், மறைக்கப்பட்ட அல்லது முகம் காட்டி எழுத முடியா தகவல்கள் ஆவணமாக வேண்டும் என்பதால் IP முகவரியில் எழுதிய நான் பயனர் கணக்கு மூலம் இங்கு எழுதத் தொடங்கினேன். எவருக்கும் நிர்வாக அணுக்கம் கிடைக்கக் கூடாது என்பதல்ல எனது நோக்கம். மாறாக, சிறந்த நிர்வாகிகள் தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டும் என்பதே.
 
தமிழ்நடை, விக்கி நடை ஆகியவற்றின் அடிப்படையில் நிருவாக அணுக்கம் வழங்குவதை முடிவு செய்ய வேண்டியதில்லை என்பதை நீங்கள் ஆதரித்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் என்னுடைய கேள்வி தமிழ்நடை விக்கி நடை தெரியாத ஒருவர் மற்ற பயனர்களை எப்படி வழிநடத்துவார்? முந்தைய வேண்டுகோள்கள் 9 இல் ஒருவர் கொடுத்துள்ள பதிலைப் பாருங்கள். அதன் இன்றைய தாக்கம் எப்படியுள்ளது?
--[[பயனர்:Tamil23|Tamil23]] ([[பயனர் பேச்சு:Tamil23|பேச்சு]]) 03:01, 17 அக்டோபர் 2013 (UTC)
 
=== வாக்குப்பதிவு நிறைவு ===