இசுலாமியச் சட்ட முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 66 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி adding {{tl|Law}} using AWB
வரிசை 4:
 
[[முஸ்லிம்|முசுலிம்கள்]] பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும், [[முஸ்லிம்]] நாடுகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற நாடுகளிலும் குற்றவியல் சட்டங்கள் நிலவரைச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், சான்றியல் சட்டங்கள் போன்ற விதிமுறைகள் சாதி சமயவேறுபாடின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுத்தப் படுகின்றன{{fact}}.
 
 
== உருவான வரலாறு ==
வரி 13 ⟶ 12:
 
== இஸ்லாமிய சட்ட வாரியம், இந்தியா ==
[[இந்தியா|இந்தியாவில்]] பலநூறு ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்த இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள், ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமானதும் 'வாரன் ஹேல்டிங்ஸ் பிரபு' காலத்தில் மாற்றத்திற்கு உள்ளாயின. ஹிந்துக்களுக்கு ஹிந்துமத சாஸ்திர அடிப்படையிலும், முஸ்லிம்களுக்கு ஷரீஅத் சட்ட அடிப்படையிலும் உரிமை இறக்கம்.
 
(Succession) வம்சாவளி சொத்து (INHERITANCE), சாதி (CASTE) போன்றவை தொடர்பான வழக்குகளில் நீதி வழங்க 1772-ம் ஆண்டில் வகை செய்யப்பட்டது. மேலும் 'இந்தியக் குற்றவியல் சட்டம்' (INDIAN PENAL CODE) என்பதன் மூலம், முஸ்லிம் குற்றவியல் சட்டம் (MUSLIM CRIMINAL LAW) முழுமையாக மாற்றப்பட்டது.பின்னர் 1937-ம் ஆண்டில் 'ஷரீஅத் சட்டம்' (MUSLIM PERSONAL LAW SHARIAT APPLICATION ACT 1937) இச்சட்டத்தின் இரண்டாவது பிரிவின் ரத்துகளில் விவாகரத்து, வாழ்க்கைப்படி (ஜீவனாம்சம்), மஹர் தொகை, காப்பாளராகுதல், அன்பளிப்பு, டிரஸ்ட், வக்ஃபு, திருமணம், பெண்களுக்கான சிறப்புச் சொத்து, உயிலில்லா உரிமையிறக்கம் (INTESTATE SUCCESSION) ஆகிய வழக்குகளில் முஸ்லிம்களுக்கு ஷரீ அத் சட்ட அடிப்படையிலே நீதி வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் காலப்போக்கில் நாட்டில் இயற்றப்படுகின்ற சட்டங்களின் மூலம் இந்த ஷரீ அத் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நீதிமன்ற தீர்ப்புகளிலும் இஸ்லாமிய ஷரீ அத் சட்டத்திற்கு முரண்பாடான தீர்ப்புகள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. சில சமயங்களில் நீதிமன்றத் தீர்ப்புகள் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் தத்துவங்களுக்குமே மாறானவையாக அமைந்து விடுகின்றன.
 
பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து போன்றவை இஸ்லாமியச் சட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்டு வருகின்றன.
 
பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து போன்றவை இஸ்லாமியச் சட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்டு வருகின்றன.
 
== ஷரீஅத் சட்டம் சில தகவல்கள் ==
 
மார்க்கத் தீர்ப்புகள் வழங்குவதில் மிகவும் கவனம் தேவைப்படுகிறது. ஷரீஅத் சட்டத்தில் நீதி எப்படி வழங்க வேண்டும் என்பதற்கு, [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்கள்]] காலத்தில் நடந்த நிகழ்வுகள் முன்னுதாரனமாய் உள்ளன.
 
நபித்தோழர் முஆது பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை [[யேமன்|யமன் நாட்டிற்கு]] புதிய நீதிபதியாக நியமித்து அனுப்புவதற்கு முன்பு [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்கள்]] விடுத்த வினாக்களுக்கு விடை கூறும் போது 'திருக்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு நான் நீதி வழங்குவேன். விஷயம் குர்ஆனில் காணப்படாத போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லையும் செயலையும் ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவேன். நபிமொழியிலும் நபி வழியிலும் விடை காணக்கிடைக்காவிட்டால், என் பகுத்தறிவைப் பயன்படுத்தி (மனச் சாட்சிக்கொப்ப) நீதி வழங்குவேன்' என நீதிபதியாக நியமனம் பெற்ற நபித்தோழர் பதிலளித்தார். இப்பதில் [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்களுக்கு]] மனநிறைவைத் தந்தது. (நூல்: திர்மிதீ, அபூதாவூது, தாரமீ)
 
== இஜ்மா, கியாஸ் ==
திருக்குர் ஆனையும், [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்களின்]] மொழிகளையும், வழிகளையும் கற்றுணர்ந்த அறிஞர்களே குர்ஆனுக்கும், 'சுன்னா'வுக்கும் விளக்கமும் விரிவுரையும் வழங்கத் தகுதியுடையவர்கள் ஆவர்{{fact}}. இத்தகைய அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருப்பார்களேயானால், அதற்கு 'இஜ்மா' என்று பெயர். இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு நல்லதோர் அடிப்படையாக, இந்த 'இஜ்மா'வை இமாம்கள் கருதுகிறார்கள்{{fact}}. ஆனால் இஸ்லாமியத்தில் அவ்வாறு இல்லை எனினும் [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்கள்]] வாழ்ந்த காலத்திற்கு முன்பே இருந்த சில வழக்கங்கள், [[குர்ஆன்]] மற்றும் ஹதீஸுக்கு மாறுபடாமல் இருந்ததால் அங்கீகரிக்கப்பட்டன{{fact}}.
 
புதியதாக ஒரு பிரச்சினை எழும்போது, [[குர்ஆன்]] மற்றும் [[ஹதீஸ்|ஹதீஸை]] அடிப்படையாக வைத்து, பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு யூகித்து முடிவு காண்பதற்கு 'கியாஸ்' (QUIYAS) என்பர். [[சியா முசுலிம்|சியா பிரிவினரும்]], ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த சிலரும் கியாஸை இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு 'நல்ல அடிப்படை' என ஒப்புக் கொள்ளாவிட்டாலும் மற்றவர்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்{{fact}}. குறிப்பாக இமாம் அபூஹனீபா அவர்கள் [[குர்ஆன்]], [[ஹதீஸ்]] மூலம் நேரடியாக தெளிவு கிடைக்காத விசயங்களில் [[குர்ஆன்]] [[ஹதீஸ்|ஹதீஸை]] அடிப்படையாகக் கொண்டுள்ள 'கியாஸ்' முறையை அதிகமாகப் பின்பற்றியிருக்கிறார்கள்.
வரி 49 ⟶ 47:
 
== வரலாற்றுத் தீர்ப்புகள் ==
{{Empty section}}
 
 
{{Law}}
 
[[பகுப்பு:இஸ்லாமியச் சட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமியச்_சட்ட_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது