திருவெம்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
'''திருவெம்பாவை''' என்பது [[மாணிக்கவாசகர்]] [[திருவண்ணாமலை]]யை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. [[சிவன்|சிவனுக்கு]]த் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை.

திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது.
வரிசை 7:
பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.

தாய்லாந்தில் [[திருப்பாவை]], திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது. <ref>http://groups.google.com/group/minTamil/msg/03d1d7b8c1e5e32be</ref>

== திருவெம்பாவைப் பாடல்களில் சில ==
வரிசை 17:
::போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
::ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
வரி 27 ⟶ 26:
::கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
::ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிர் எழுந்தென்
வரி 37 ⟶ 35:
::எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
::இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வரி 47 ⟶ 44:
::கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
::எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
வரி 57 ⟶ 53:
::சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
::ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
வரி 67 ⟶ 62:
::வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
::ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
வரி 77 ⟶ 71:
::சொன்னோங்கேல் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
::என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
வரி 87 ⟶ 80:
::ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
::ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
வரி 97 ⟶ 89:
::சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
::என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
வரி 107 ⟶ 98:
::கோதில் குலத்தரன் தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
::ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
வரி 117 ⟶ 107:
::ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
::எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
வரி 127 ⟶ 116:
::ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
::ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்

பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
வரி 137 ⟶ 125:
::சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
::பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
வரி 147 ⟶ 134:
::ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
::பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
வரி 157 ⟶ 143:
::ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
::ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
வரி 167 ⟶ 152:
::அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
::பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
வரி 177 ⟶ 161:
::தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
::என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
வரி 187 ⟶ 170:
::விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
::பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
வரி 197 ⟶ 179:
::கங்குல்பகல் எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
::எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்

போற் றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
வரி 216 ⟶ 197:
==மேற்கோள்கள்==
{{Reflist}}

[[பகுப்பு:சைவத் திருமுறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருவெம்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது