பூசை (இந்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 21:
#நைவேத்யம் - பல்வேறு உணவுப் பொருட்களை இறைவனுக்குப் படைத்தல். இந்தப் படையலைப் பின்னர் பக்தர்கள் பிரசாதமாக உண்பர்.
#நீராஜனம் - கற்பூரம் ஏற்றி ஆரத்தியெடுத்தல்
#தாம்பூலம் - வெற்றிலை, பாக்கு அளித்தல்

விரிவான பூசைகளில் இத்துடன் இசைபாடுதல், இசைக் கருவிகளை முழக்குதல், நடனமாடுதல் ஆகிய செயல்களும் இடம்பெறுகிறது. இது கருதியே பல பெரிய இந்துக் கோயில்களில் பாடகர்கள், நாதஸ்வரம், தவில், மிருதங்கம் போன்ற கருவிகளில் வல்ல இசைக்கலைஞர்கள், நடன மாதர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

===வேத மந்திரங்கள்===
வரிசை 29:
[[படிமம்:Pooja.JPG|right|thumb|300pxl| திருவாசகம் முற்றோதல் பூசை]]

பூசையின் போது வேத மந்திரங்களையும், அந்தக் குறிப்பிட்ட தெய்வம் மீது புனையப்பட்ட தோத்திரங்களையும், பக்திப் பாடல்களையும் ஓதுவார்கள். தமிழகத்தில் [[பக்தி இலக்கியம்|பக்தி இலக்கிய]] காலகட்டத்தில் பூசை மிகப் புகழ் பெற்ற வழிபாட்டு முறையாக இருந்திருக்கிறது.

வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்

போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே

என்று [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தர்]] தேவாரமும்,

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் - உன்

நாமம் என் நாவில் மறந்தறியேன்

என்று [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]] தேவாரமும்

பூசை பற்றிக் குறிப்பிடுகின்றன.
வரிசை 47:
==கோயில் பூசைகள்==

கோயில்களில் நடைபெறும் பூசைகள் மிக விரிவானவை. இந்து சமயத்தின் இருபெரும் பிரிவுகளான சைவ, வைணவப் பெருங்கோவில்களில் தினந்தோறும் ஆறு காலம் பூசைகள் நடைபெறுகின்றன. இந்தப் பூசை முறைகள் பற்றி சைவ/வைணவ [[ஆகமம்|ஆகம]] நூல்கள் மிகவும் விரிவாகக் கூறுகின்றன. இவை தவிர அம்மன் கோயில்கள் மற்றும் கிராம தேவதை கோயில்களில் அந்தந்த ஊர் மரபுப்படியோ அல்லது தாந்திரீக முறைகளின் அடிப்படையிலோ பூசைகள் நடைபெறுகின்றன.

===பூசை செய்பவர்கள்===
வரிசை 60:
திருமணம், பெயர் சூட்டல், புதுமனை புகுதல், காதணி விழா போன்ற பல்வேறு இந்து சமயச் சடங்குகளிலும் பூசை ஒரு முக்கியப் பகுதியாக இடம் பெறுகிறது.

==மானச பூசை==

தத்துவ நிலையில், தெய்வத்தை உள்ளத்தின் உள்ளேயே கண்டு அகவயமாகவே வழிபடுதலும் இந்து மரபில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பூசை முறையாகும். இவ்வகைப் பூசை முழுக்க மனதளவிலேயே நிகழ்வது, இதற்கு விக்கிரகங்களோ, மலர்கள் போன்ற பூசைப் பொருட்களோ தேவையில்லை. தியான வகையிலான இந்தப் பூசை மானச பூசை என்று வழங்கப் பெறுகிறது.

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே

மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே

என்று [[தாயுமானவர்]] இவ்வகைப் பூசையினைக் குறிப்பிட்டுள்ளார்.
வரிசை 73:

== வெளி இணைப்புகள் ==

* [http://www.hindupedia.com/en/Puja இந்துப்பீடியாவிலிருந்து பூசை] {{ஆ}}
* [http://www.tamilhindu.net/t1136-topic ஏன் பூசை செய்யவேண்டும்?]
"https://ta.wikipedia.org/wiki/பூசை_(இந்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது