கிருஷ்ணா வைகுந்தவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஐநா பொதுச்சபையில் உரை: clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB
No edit summary
வரிசை 23:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வைகுந்தவாசன் இலங்கையில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] [[அளவெட்டி]] எனும் ஊரில் பிறந்தார். இலங்கை அரச சேவையில் எழுத்தராகப் பணியாற்றி, அரசு எழுத்தர்களின் தொழிற்சங்கத்தில் உறுப்பினராய் இணைந்து அதன் பொதுச் செயலாளரானார். [[1950கள்|1950களில்]] மக்கள் குரல் என்ற இலங்கையின் முன்னணி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று 1960 இல் இங்கிலாந்து சென்றார். பின்னர் 10 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார். ஐக்கிய இடதுசாரி முன்னணியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்துக்காக 1965 தேர்தலில் [[காங்கேசன்துறை தேர்தல் தொகுதி]]யில் போட்டியிட்டார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref>
 
ஐக்கிய இடதுசாரி முன்னணியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்துக்காக [[காங்கேசன்துறை]] தொகுதியில் போட்டியிட்டார். 1971 இல் [[சாம்பியா]] நாட்டில் மாவட்ட நீதிபதியாகப் பதவியேற்று சென்றார். 1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்டார். இதன் பின் ஓய்வு பெற்று [[இலண்டன்]] சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஆகத்து 1978 இல், இங்கிலாந்தில் பாரிஸ்டராகப் பணியாற்றியபோது நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க வழக்குரைஞர்கள் கழகத்தின் மாநாட்டில் பிரித்தானியாவின் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார்<ref name="Asian Tribune">[http://www.asiantribune.com/news/2010/09/26/submission-llrc-part-viii-who-really-shot-jaffna-mayor-alfred-duraiyappah Submission to LLRC Part VIII - Who really shot Jaffna Mayor Alfred Duraiyappah?], K.T.Rajasingham, சூன் 29, 2010</ref>.
 
==ஐநா பொதுச்சபையில் உரை==
வரிசை 49:
இதைத் தொடர்ந்து நியூயோர்க்கில் இருந்து வெளிவரும் "இந்தியா எப்றோட்" என்ற ஆங்கில ஏட்டின் பி.பி.கூப்பர் என்பவர் வைகுந்தவாசனை விரிவான முறையில் பேட்டி கண்டு 1978 ஆம் ஆண்டு [[அக்டோபர் 20]] இதழில் நேர்காணலை பிரசுரித்திருந்தார். மேலும் பல ஊடகவியலாளர்கள் வைகுந்தவாசனின் பேட்டிகளைத் தமது பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார்கள்.
 
==எழுதிய நூல்நூல்கள்==
* ''நான் கண்ட நவசீனா''
* "ஐ.நா வில் தமிழன் - என் முதல் முழக்கம்!" (முதற் பதிப்பு: சூலை 1990, இரண்டாம் பதிப்பு: 1993)
 
==மேற்கோள்கள்==
<references/>
*[http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_at_the_U._N._1992 Tamil at the UN], நூலகம் திட்டம்
 
==வெளி இணைப்புகள்==
வரி 62 ⟶ 64:
[[பகுப்பு:2005 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கை தொழிற்சங்கவாதிகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் நீதிபதிகள்]]
[[பகுப்பு:தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணா_வைகுந்தவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது