"இ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

289 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
{{தமிழ் எழுத்துக்கள்}}
'''இ''' ({{audio|ta-{{PAGENAME}}.ogg|{{PAGENAME}}}}) தமிழ் மொழியின் [[எழுத்து]]க்களில் ஒன்று. [[தமிழ் நெடுங்கணக்கு|தமிழ் நெடுங்கணக்கில்]] மூன்றாவதுமூன்றாவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது [[மொழி]]யின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "இகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஈனா" என்பது வழக்கம்.
 
=="இ" யின் வகைப்பாடு==
தமிழ் எழுத்துக்களின் உள்ள [[உயிரெழுத்து]], [[மெய்யெழுத்து]] என்னும் இரண்டு வகைகளில் '''இ''' உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து எனப்படுகின்றது. குற்றெழுத்துக்கள் ஒரு [[மாத்திரை (இலக்கணம்)|மாத்திரை]] அளவேஅளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 11</ref>
 
தமிழில் சுட்டெழுத்துக்கள் மூன்று. அவை [[அ|அகரம்]], இ, [[உ|உகரம்]] என்பனவாகும். அவற்றுள் இகரமும் ஒன்று. இது அண்மைச் சுட்டைக் குறிக்கப் பயன்படுகின்றது<ref name="இளவரசு, சோம., 2009. பக். 42">இளவரசு, சோம., 2009. பக். 42</ref>. எடுத்துக்காட்டாக இவன், இது, இங்கே போன்ற அண்மைச் சுட்டுச் சொற்களில் '''இ''' முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் '''இ''' சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகச் சுட்டு எனப்படுகின்றது. '''இ''' புறச் சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறம்பாக நிற்கும்<ref name="இளவரசு, சோம., 2009. பக். 42"/>. இச்சிறுவன் (இ + சிறுவன்), இக்கோயில் (இ + கோயில்) போன்ற சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
 
==இனவெழுத்துக்கள்==
 
* இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது '''இ''', '''ஈ''' வுக்கு இன எழுத்தாக அமையும்.
* பொருள் அடிப்படையில் '''அ''', '''ஆ'''. '''ஈ''' என்பவைஎன்பனவற்றுக்கு '''இ''' இன் இன எழுத்தாக அமைவனஅமையும்.
* வடிவ அடிப்படையில், '''அ''', '''உ''', '''ஊ''' என்பன '''இ''' வுக்கு இன எழுத்துக்கள் எனவும் கூறப்படுகின்றது<ref>இளவரசு, சோம., 2009. பக். 44</ref>.
 
==சொல்லில் இகரம் வரும் இடங்கள்==
[[படிமம்:Tamil writing 4 .gif|thumb|250px|'இ' எழுதும் முறை]]
தனி '''இ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் '''இ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து ஙி, டி, ணி, ரி, லி, ழி, ளி றி, ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களை எழுதுவோர் சிலர் டி, ரி, லி போன்ற எழுத்துக்களும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். ''டிக்கட்'', ''ரிக்சா'', ''லிவர்பூல்'', ''றியோடிஜெனிரோ'' போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இகரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.
 
=="இ" யும் மெய்யெழுத்துக்களும்==
'''இ''' உடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து இகர உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 15</ref>. இதனால், இகரமேறிய மெய்களை எழுதும்போது அகரமேறிய மெய்யெழுத்துடனேயே இகரத்தைக் குறிக்கும் "விசிறி" எனப்படும் துணைக்குறியையும் சேர்த்து எழுதுவது மரபு.
 
18 மெய்யெழுத்துக்களோடும் அகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1524158" இருந்து மீள்விக்கப்பட்டது