மெசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி விக்கியாக்கம்
வரிசை 3:
[[File:Samuel e david.jpg|250px|thumb|சாமுவேல் தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்தல் (1 சாமு 16) ஓவியம் காப்பிடம்: சிரியா; காலம்: கி.பி. 3ஆம் நூற்றாண்டு]]
 
'''மெசியா''' (''Messiah'') என்னும் பெயர் ஒரு மக்கள் குழுவினருக்கு விடுதலை அளிப்பவர், மீட்பு வழங்குபவர் என்னும் பொருள் தருகின்ற சொல் ஆகும். இது குறிப்பாக, [[யூதம்]], [[கிறித்தவம்]], [[இசுலாம்]] ஆகிய [[ஆபிரகாமிய சமயங்கள்]] சார்ந்த கருத்துருவகம் ஆகும்.
 
==எபிரேய விவிலியத்தில்==
வரிசை 10:
மெசியா என்னும் கருத்துருவகம் யூத சமயத்துக்கு மட்டுமே உரியதன்று. எபிரேய விவிலியமே, பெர்சிய மன்னனான சைரசு என்பவரை "மெசியா" என்று அழைக்கிறது.<ref>[http://jewishencyclopedia.com/articles/4828-cyrus#anchor7 Jewish Encyclopedia: Cyrus: Cyrus and the Jews]: "This prophet, Cyrus, through whom were to be redeemed His chosen people, whom He would glorify before all the world, was the promised Messiah, "the Shepherd of Yhwh" (xliv. 28, xlv. 1)."</ref>ஏனென்றால் யூத சமயத்தைச் சாராதவராக இருந்தாலும் சைரசு மன்னன் யூதர்களின் கோவிலை மறுபடியும் கட்டி எழுப்ப ஆணையிட்டு, இசுரயேல் மக்களுக்கு ஆதரவு காட்டினார்.
 
யூதர்களின் மெசியா என்பவர் [[தாவீது அரசர்|தாவீது அரசனின்]] வழித்தோன்றலாக வருவார் என்றும், கடவுளிடமிருந்து திருப்பொழிவு பெறுவார் என்றும், இசுரயேலின் பன்னிரு குலங்களையும் அரசாள்வார் என்றும், அமைதி நிலவுகின்ற ஒரு புதிய உலகைத் தோற்றுவிப்பார் என்றும் யூதர்கள் நம்பினர்.
 
==மெசியாவும் கிறித்துவும்==
வரிசை 20:
 
==இசுலாமிய மரபு==
இசுலாமிய மரபுப்படி, இயேசு [[மரியா (இயேசுவின் தாய்)|மரியாவின்]] மகனாகப் பிறந்தவர்; இசுரயேலருக்கு இறைவாக்கினராகவும் மெசியாகவாகவும் அனுப்பப்பட்டவர். அவர் இறுதி நாள்களில் மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்புவார்; "வழிகாட்டப்பட்டவர்" (மாதி [மாக்தி] Mahdi) என்பவரோடு இணைந்துகொண்டு "போலி மெசியா"வை எதிர்த்து முறியடிப்பார். <ref name="MC_1">{{cite web|url=http://muttaqun.com/dajjal.html |title=Muttaqun OnLine - Dajjal (The Anti-Christ): According to Quran and Sunnah |publisher=Muttaqun.com |date= |accessdate=9 November 2012}}</ref>
 
==மெசியா என்னும் சொல்லின் பொருள்==
வரிசை 40:
இறுதிக் காலம் பற்றிய யூத இறையியலில், மெசியா என்பவர் வருங்காலத்தில் தாவீதின் குலமரபிலிருந்து பிறப்பார் என்றும், அவர் திரு எண்ணெயால் பூசப்பட்டு அரசராகத் திருப்பொழிவு பெற்று, கடவுளின் அரசில் ஆட்சி செய்வார் என்றும், மெசியா காலத்தில் யூத மக்களை ஆள்வார் என்றும் உள்ளது. யூத சிந்தனையில், மெசியா என்பவர் கடவுளுக்கு நிகரானவரோ கடவுளின் மகனோ அல்ல. எதிர்காலத்தில் மெசியா வருவார் என்பது யூத சமயத்தின் ஓர் அடிப்படை நம்பிக்கை ஆகும்.
 
யூத சமயத்தின் ஒரு பிரிவான கபாலா (''Kabbalah'') போதனைப்படி, வரவிருக்கும் மெசியாவின் காலத்தில் அமைதியும் சுதந்திரமும் நிலவும். தாவீதின் மகனான மெசியாவுக்கு முன் [[யோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)|யோசேப்பின்]] மகனான மெசியா வருவார். அவர் தம் உயிரையே பலியாகத் தந்து இசுரயேல் மக்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து, அவர்களை தாவீதின் மகனான மெசியாவின் வருகைக்குத் தயார் செய்வார்.<ref>Kahn, Rabbi Ari. "The Beauty of Joseph" a lesson within M'oray Ha'Aish http://www.aish.com/tp/i/moha/48909612.html "There will be two messiahs one day -- Messiah Son of Joseph, who prepares the way for the Messiah Son of David, himself a descendent of Judah. According to tradition, the Messiah Son of Joseph will unite all Israel in preparation for the arrival of the Messiah Son of David, but will die in the process [Sukka 52a] in an act of self-sacrifice for his people. Just like his ancestor Rachel, whose self-sacrifice allowed the building of the Second Temple, his self-sacrifice will allow the building of the Third Temple. The spiritual model is Joseph, who chose not to contact his father even though it would have made for a "nicer" life."</ref>
 
==கிறித்தவப் பார்வையில் மெசியா==
வரிசை 47:
{{Main|இயேசு}}
 
மெசியா என்னும் எபிரேயச் சொல்லின் நேரடி கிரேக்க மொழிபெயர்ப்பு "கிறிஸ்தோஸ்" (''khristos'' (χριστος)), அதன் ஆங்கில வடிவம் ''Christ''. கிறித்தவர்கள் இயேசுவை "கிறிஸ்து/கிறித்து" என்றும் மெசியா என்றும் அழைப்பார்கள். மெசியா பற்றி எபிரேய விவிலியத்தில் கூறப்பட்ட இறைவாக்குகள் இயேசுவின் வாழ்க்கையில் நிறைவேறின என்றும், இயேசுவே விவிலியத்தில் முன்னறிவிக்கப்பட்ட மெசியா ஆவார் என்பதும் கிறித்தவர்களின் நம்பிக்கை. மெசியாவாக வந்த [[இயேசு]] தமது பணி, சாவு, உயிர்த்தெழுதல் வழியாக உலகத்தை மீட்டு அதன் மீட்பரும் இரட்சகரும் ஆனார் எனவும், அதே இயேசு மீண்டும் அரசராகவும் ஆண்டவராகவும் வருவார் எனவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர்.
 
மிகப்பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் இயேசுவைக் கடவுளின் மகனாகவும், மனுவுருவெடுத்த இறை வார்த்தையாகவும் ஏற்று வழிபடுகின்றன. இயேசுவை மெசியாவாகவும் ஏற்கின்றன. ஆனால் யூத சமயமும் இசுலாமும் இயேசுவைக் கடவுளின் மகனாக ஏற்பதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/மெசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது