விக்கிப்பீடியா:விக்கிசார்பாக அங்கிகாரமற்று இயங்குவதை தடுத்தல் (வரைவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
 
* வாழ்நாள் தடை என்பதை ஆதரிக்கவில்லை. விக்கியில் எழுதுபவர்கள் எல்லாம் பெறுப்பாளர்கள் தான். ஒவ்வொரு வகையில் விக்கி எழுதுதல் அவரவருக்கு சுயலாபமே(மகிழ்ச்சி, கற்றல், மொழி, தொழிற்நுட்பம்). அந்தப் பொறுப்பைத் விக்கி வளர்ச்சியின்றி தனிமனித சுயலாபத்திற்கு (மட்டும் அல்லது அதிகமாக) பயன்படுத்தினால் தான் அது தவறு. ஆகவே வரைவின் சாரத்தை விரும்பவில்லை --[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:26, 21 அக்டோபர் 2013 (UTC)
: விக்கிப்பீடியாவில் பொறுப்பு, பொறுப்பு அளிப்பது என்பவற்றுக்கெல்லாம் பொருள் எதுவும் கிடையாது. விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக எந்தப் பயனரும் தன்னாலான முயற்சிகளைச் செய்யலாம். அப்படித்தான் நடந்துவருகிறது. யாராவது விக்கிப்பீடியாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படும்படியோ அல்லது பிறரைத் தவறாக வழிகாட்டும்படியோ நடந்து கொண்டால் அதற்கேற்பப் பிற பயனர்கள் தலையிடலாம். முன்னைய சந்தர்ப்பமொன்றில் விக்கியின் பயனர் அல்லாத ஒருவரே அவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார். அப்படியான சந்தர்ப்பங்களில் நாம் எழுதும் விதிகள் பயன்படா. இப்படியான கடுமையான விதிகள் பயனர்கள் சுதந்திரமாகச் செயல்பட்டு தமிழ் விக்கிப்பீடியாவை வளர்ப்பதைத் தடுத்துவிடலாம். ---[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 19:20, 21 அக்டோபர் 2013 (UTC)