உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 269:
சுப்பிரமணி, மறுமொழி அளிக்க முன்வந்தமைக்கு நன்றி. கேள்வி எண் 7க்கு நீங்கள் அளித்த மறுமொழியை ஏற்றுக் கொள்கிறேன். வழக்கமாக, தமிழ் விக்கிப்பீடியாவில் கருத்து கேட்பதற்கு ஒரு வார காலம் தரப்படும். எனவே, மற்ற கேள்விகளுக்கான மறுமொழியைப் பெற்றுக் கொள்ள நான் 24 அக்டோபர், 2013 வரை பொறுத்திருப்பேன். ஒரு வேளை, தனிப்பட்ட காரணங்களால் உங்களுக்குக் கூடுதல் காலம் தேவைப்பட்டாலும் சொல்லுங்கள். மறுமொழி அளிக்காமல் இருப்பதற்கான உரிமையும் மறுமொழி அளிக்கவில்லை என்று தெளிவுபடுத்துவதற்கான உரிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால், முறையான மறுமொழி வராத கேள்விகள் தொடர்பாக அடுத்து வரும் நடவடிக்கையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 02:56, 20 அக்டோபர் 2013 (UTC)
:விளக்கியதற்கு நன்றி இரவி. எண் வரிசையிட்டுக் கருத்திட்டவராயிற்றே, அதனால், இங்கும், ஒவ்வோர் எண்ணுக்கும் ஒவ்வொரு விளக்கம் தருவார் என்ற நப்பாசையில் கேட்டுவிட்டேன். --[[User:Surya Prakash.S.A.|<span style="color:#480607;text-shadow:#66FF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''சூர்யபிரகாஷ்'''&nbsp; </font></span>]] '''<sup><small>[[User talk:Surya Prakash.S.A.|உரையாடுக]]</small></sup>''' 03:52, 20 அக்டோபர் 2013 (UTC)
 
# வரும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். கருத்துக்களின் முடிவாக, நிறை குறை தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள். நிறைகள் குறித்து அனைவரும் மகிழ்ச்சியடையலாம். இது விக்கிப்பீடியாவிற்கு நடத்தப் பெறும் முதல் நிகழ்ச்சி என்பதால் சில குறைகள் ஏற்பட்டுள்ளன. தாங்கள் குறிப்பிட்டுள்ள குறைகள் அனைத்தும் அடுத்த நிகழ்வுகளில் வராமல் இருப்பதற்கான ஆலோசனைகளாக எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவான பதிலை அளித்திருப்பேன். (குறைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்) தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்திருப்பேன்.
# ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் தாங்கள் என்னிடம் தொலைபேசியில் ஊடக ஒருங்கிணைப்பு குறித்து கேட்ட போது நான் தேனியிலிருந்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று முதலிலேயே உங்களிடம் தெரிவித்து விட்டேன். இருப்பினும், இதழாளர் சந்திப்புக்குச் சென்னை, செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவன அலுவலகக் கண்காணிப்பாளரிடமிருந்து கிடைத்த தகவலையும் அதற்கான தொடர்பு எண்ணையும் பெற்றுத் தங்களுக்கு அளித்தேன் (அந்தத் தொடர்பு எண் வேலை செய்யவில்லை என்கிறீர்கள், அப்படியானால் என்னிடம் தெரிவித்திருக்கலாமே...?) அரங்கிற்கு நீங்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நானாக எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் சென்னைப் பல்கலைக்கழக அரங்கு குறித்த தகவலைத் தெரிவித்தேன். (ஒருங்கிணைப்பாளர்களுக்குத் தலைமைப் பொறுப்பு வகித்த தாங்களோ அல்லது மற்ற ஒருங்கிணைப்பாளர்களோ என்னிடம் எந்த விதக் கலந்துரையாடலும் செய்யவில்லை எனக்கென்று எந்தக் குறிப்பிட்ட பணியும் அளிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்)
#என்னுடைய பங்களிப்புகள் தேவை என்று என்னிடம் எதுவும் கோரப்படவில்லை. எனவே அதற்கான நிலையும் ஏற்படவில்லை.
#எந்தவொரு நிகழ்ச்சியும் முன்பே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளரின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் நீங்கள் ஒருங்கிணைப்பாளர்களைக் கலந்து பேசித் திட்டமிட்டுச் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஒருங்கிணைப்பாளர்கள் பலர் முதல் நாளே சென்னை வந்து விட்டோமே... தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பவர்களை விட்டுவிட்டு... மற்றவர்களுடன் கலந்துரையாடி இருந்திருக்கலாமே...
#இதுகுறித்து நான் எனது கருத்தின் சிறப்புகளாகக் குறிப்பிட்டிருக்கிறேன். ஒருங்கிணைப்பாளர்கள் அளவிலாவது தாங்கள் முதல் நாளே கலந்துரையாடி இருக்க வேண்டும். நான் நம்முடைய பங்களிப்புகள் எதுவும் தேவையில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். இது நமக்கிடையிலான தகவல் பரிமாற்றக் குறைபாடுதான்.
#நிகழ்ச்சியில் சிலர் என்கிற நிலையிலிருந்து மாற்றி மேலும் சிலருக்கும் வாய்ப்பளித்திருக்க வேண்டும். இந்த நிலையில் நான் என்னுடைய கருத்தை மீளப் பெறுவதாக இல்லை.
#ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கும் எனது பெயரை எடுத்து விடலாம்.
 
== விக்கிப்பீடியா தொடர்பான உங்கள் ஆக்கங்களை கட்டற்ற உரிமத்தில் தர வேண்டுகோள் ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Theni.M.Subramani" இலிருந்து மீள்விக்கப்பட்டது