விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 499:
==தேனி.மு.சுப்பிரமணியின் பதில்கள்==
 
#தேவையற்றதை நீக்கித்தான் ஆக வேண்டும். குப்பையைச் சேர்த்துக் கொண்டிருக்க முடியாது. (நான் தவறுதலாக நீக்கியிருந்தாலும், பிற பயனர் நிருவாகிகள் அதை மீட்டெடுத்து விடுவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்). விக்கி நடையில் இல்லாததை விக்கியாக்கம் என்று போடாமல் சிறப்புக் கட்டுரை என்றா போட முடியும்.? என்னுடைய கட்டுரையில் குறை காணப்பட்டால் பிற பயனர் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் (இங்கும் என் மீது தனித்தாக்குதல்கள்)
#தமிழ் கம்ப்யூட்டர் இதழில் முதற்பக்கக் கட்டுரையின் நிலை தெரிவிக்கப்பட்டது. அடுத்த இதழில் வெளியான அடுத்த பகுதியைப் படித்தீர்களா? நான் விக்கிக்குச் செய்த பணிகளைப் பலரும் அறிவர். பொறாமையுடன் பார்ப்பவர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற நிலையில் இருப்பதும் உண்டு. (இங்கும் என் மீதான தனித் தாக்குதல்களைக் கவனத்தில் கொள்க)
#தமிழ் கம்ப்யூட்டர் இதழில் மட்டுமல்ல, ஆலமரத்தடியிலும் முதற்பக்கக் கட்டுரையின் நிலை தெரிவிக்கப்பட்டது. இதன் பின்பு மாற்றங்கள்முதற்பக்கக் கட்டுரை மட்டுமில்லை முதற்பக்கங்களின் அனைத்துத் தகவலுக்கும் மாற்றங்களுக்கான சில பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. (இங்கும் என் மீது தனித்தாக்குதல்கள்)
# பெயரளவில் ஒருங்கிணைப்பாளராகச் சேர்க்கப்பட்டிருந்தேன். குறைகளிருந்தால் சொல்லாமல்...என்ன செய்வது? நான் எதையும் மறைத்துச் செயல்பட விரும்புவதில்லை. அடையாளத்தைக் கூட மறைத்துக் கொள்வதில் விருப்பமில்லை (இங்கு தாங்கள் ஒருங்கிணைப்பாளராகவோ அல்லது அவர்களில் ஒருவரின் தீவிர ஆதரவாளராகவோ இருந்தால் தெரிவிக்கலாம்)
#நான் வெளியேறத்தான் விரும்பினேன். என்ன செய்வது? தங்களைப் போன்ற விசமிகள் வரவு என்னை மீண்டும் இங்கு கொண்டு வந்து விட்டுவிட்டது. என்னுடைய தனித்திறன் குறித்து எனக்கு மட்டுமில்லை... அது பலருக்கும் தெரியும். அதனால்தான் பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறேன். தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றிருக்கிறேன். இன்னும் பல பரிசுகளும்,விருதுகளும் பெறுவேன் என்கிற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது