பங்குனி உத்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
[[சிவன்|சிவனுக்கும்]] [[பார்வதி]]க்கும் ''சோமசுந்தரர்'' என்றும் ''மீனாட்சி'' என்றும் நாமம் கொடுத்து [[திருமணம்|மணம்]] செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.
 
இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி [[இசைக்கருவி|வாத்தியங்கள்]] முழங்க, [[வேதம்|வேதங்கள்]] ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
 
பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா [[பசு]]வாகிய ஆன்மா [[பதி]]யாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் ''கல்யாணசுந்தர விரதம்'' என்றும் அழைப்பர்.
 
 
{{சைவம்}}
{{இந்து சமய விரதங்கள்}}
 
{{இந்து விழாக்கள்}}
 
[[பகுப்பு:கந்த விரதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பங்குனி_உத்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது