தாஜ் மகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 59:
 
இதன் வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லாப் பக்கங்களிலுமே சமச்சீரானது. அடித்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்கு [[மினார்]]கள் அமைந்துள்ளன. கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது.
 
<gallery>
Image:TajAndMinaret.jpg|அடி, குவிமாடம், மற்றும் மினார்
Image:Taj_Mahal_finial-1.jpg|உச்சி
Image:TajEntryArch.jpg|Main [[iwan]] and side pishtaqs
Image:Taj floorplan.svg|தாஜ்மகால் அடித்தளத்தின் எளிமைப் படுத்தப்பட்ட தளப்படம்
</gallery>
 
இக் கட்டிடத்தின் சலவைக்கல் குவிமாடம் ஏறத்தாழ 35 மீட்டர் உயரம் கொண்டது. [[வெங்காயம்|வெங்காய]] வடிவம் கொண்ட இக் குவிமாடம் 7 மீட்டர் உயர [[உருளை (வடிவவியல்)|உருளை]] வடிவமான அமைப்பின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் உச்சியில் [[தாமரை]] வடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது. பாரசீக, மற்றும் இந்து அம்சங்களை உடையதாகக் காணப்படும் இது கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது. இக் கலசம் 1800 ஆம் ஆண்டுவரை தங்கத்தினால் ஆனதாக இருந்ததாகவும் பின்னர் வெங்கலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதன் உச்சியில் இஸ்லாம் மதத்தைக் குறிக்கும் பிறை உள்ளது. இப் பெரிய குவிமாடத்தைச் சுற்றிலும் நான்கு சிறிய குவிமாடங்கள் உள்ளன. இவையும் பெரிய குவிமாடத்தைப் போலவே வெங்காய வடிவம் கொண்டவை. வட்டமான வரிசைகளில் அமைந்த தூண்களில் தாங்கப்பட்டுள்ள இச் சிறிய குவிமாடங்களுக்குக் கீழிருக்கும் [[கூரை]] திறந்து உள்ளதால் அவற்றினூடாக கட்டிடத்தின் உட்பகுதிக்கு [[சூரிய ஒளி]] செல்லக்கூடியதாக உள்ளது. கூரைப்பகுதியில் உள்ள சுவர்களின் மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகள் கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தாஜ்_மகால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது