"ஆர். கே. லட்சுமண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,734 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
காமன்மேன்
(காமன்மேன்)
}}
 
'''ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண்''' என்ற முழுப்பெயர் கொண்ட '''ஆர். கே. லட்சுமண்''' ([[அக்டோபர் 23]], [[1921]]) ஓர் பிரபல [[கேலிச் சித்திரம்|கேலிச் சித்திரங்கள்]] வரையும் ஓவியர். புகழ் பெற்ற எழுத்தாளர் [[ஆர். கே. நாராயண்|ஆர். கே. நாராயணனின்]] இளைய சகோதரரான ஆர். கே.லட்சுமண் இந்தியாவில் [[மைசூர்]] இல் பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச் சித்திரங்கள் (கார்ட்டூன்கள்) வரைந்தார். பின்னர் [[டைம்ஸ் ஆப் இந்தியா]]வில் ஐம்பது ஆண்டுகளுக்கு'யூ மேலாகசெட் பணியாற்றினார்இட்' (You Said it ) என்கிற தலைப்பில் காமன்மேன் (Common Man) என்கிற கதாபாத்திரத்தை அறுபதாண்டு காலமாக வரைந்து வந்தார்.<ref name = 'மேதை' >{{cite news | title = கார்ட்டூன் மேதை ஆர்.கே.லக்ஷ்மன் | newspaper = தி இந்து | date = 24 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/opinion/blogs/கார்ட்டூன்-மேதை-ஆர்கேலக்ஷ்மன்/article5263946.ece}}</ref>`.
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை [[குமாரி கமலா]]வை (பேபி கமலா மற்றும் குமாரி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார். மணமுறிப்புப் பெற்ற பிறகு, கமலா (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமண், [[மும்பை]] மற்றும் [[புனே]] ஆகிய ஊர்களில் வசிக்கிறார்.
 
==தொழில்முறை வாழ்க்கை==
'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் 'காமன்மேன்' நினைவாக ஒரு [[அஞ்சல் தலை]] வெளியிடப்பட்டது. [[ஆர். கே. நாராயண்|ஆர்.கே. நாராயணின்]] 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சித் தொடருக்கு இவர் ஓவியம் வரைந்தார். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் நற்பேறுக்கான அறிகுறியும் (mascot) இவர் வரைந்தார்.அவர் உருவாக்கிய 'காமன்மேன்'னின் சிலை வடிவம் ஒன்று இப்பொழுதும் மும்பையில் நிற்கிறது .<ref name = 'மேதை' ></ref>
 
==விருதுகள்==
*பத்திரிகை, இலக்கியம் மற்றும் கிரியேட்டிவ் தொடர்பாடல் கலை - [[ரமோன் மக்சேசே விருது]] - 1984
*பத்திரிகைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது - சிஎன்என் ஐபிஎன் டிவி 18, 29 ஜனவரி 2008
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய ஓவியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1528399" இருந்து மீள்விக்கப்பட்டது