கெட்டிசுபெர்க்கு, பென்சில்வேனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 83:
}}
'''கெட்டிசுபெர்க்கு ''' (''Gettysburg'') [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பென்சில்வேனியா]] மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் [[பரோ (பென்சில்வேனியா)|பரோ]] ஆகும். இது ஆடம்சு கவுண்டியின் தலைநகராகவும் விளங்குகிறது.{{GR|6}} 1863ஆம் ஆண்டு நிகழ்ந்த [[கெட்டிசுபெர்க்கு சண்டை]]க்காகவும் அப்போதையக் குடியரசுத் தலைவர் [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனின்]] [[கெட்டிசுபெர்க்கு உரை]]க்காகவும் இந்நகரம் அறியப்படுகிறது. இங்குள்ள கெட்டிசுபெர்க்கு தேசிய சண்டைக்களம், தேசிய இராணுவப் பூங்கா ஆகியவற்றிற்கு பெருந்திரளாக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 2010 அமெரிக்கக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 7,620 ஆகும்.<ref name="Census 2010">{{cite web| url=http://factfinder2.census.gov/bkmk/table/1.0/en/DEC/10_DP/G001/1600000US4228960| title=Geographic Identifiers: 2010 Demographic Profile Data (G001): Gettysburg borough, Pennsylvania| publisher=U.S. Census Bureau, American Factfinder| accessdate=July 16, 2013}}</ref>
==வரலாறு ==
[[அயர்லாந்து|அயர்லாந்தில்]] பிறந்த ஜேம்சு கெட்டிசு (1759-1815) என்பவரால் 1786ஆம் ஆண்டு இங்கு குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டது; தம்மால் நிறுவப்பட்ட குடியேற்றத்திற்கு கெட்டிசுடவுன் எனப் பெயரிட்டார். 1800இல் இது கெட்டிசுபெர்க்கு என மறுபெயரிடப்பட்டது. மேலும் இப்பகுதி ஆடம்சு கவுண்டி எனப் பெயரிடப்பட்டது.
[[File : Gettysburg Cemetery.jpg | thumb | left|200px |கெட்டிசுபெர்க்கு சண்டையில் உயிரிழந்தவர்களின் கல்லறைத் தோட்டம்]]
இந்தவிடத்தில்தான் [[அமெரிக்க உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டுப் போரின்]] அறுதிச் சண்டைகளில் ஒன்றாக 1863ஆம் ஆண்டில் சூலை 1 முதல் 3 வரை பெரும் சண்டை நிகழ்ந்தது. ஏறத்தாழ 6000 பேர் உயிரிழந்தனர்; 27,000க்கும் மேலானோர் காயமுற்றனர். நவம்பர் 19, 1863 அன்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் [[ஆபிரகாம் லிங்கன்]] புதிய கல்லறையை துவக்கி விழாவின் இறுதியில் ஏறக்குறைய மூன்று நிமிடங்களுக்கு உரையாற்றினார்; [[கெட்டிசுபெர்க்கு உரை]] என இன்று அறியப்படும் இந்த உரை அமெரிக்க வரலாற்றில் மிகச்சிறந்த உரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
 
இங்கு நடைபெற்ற சண்டையின் ஐம்பதாவதாண்டு விழா 1913இல் கொண்டாடப்பட்டது. சூலை 3, 1938இல் 75ஆம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் [ [[பிராங்க்ளின் ரூசவெல்ட்| பிராங்க்ளின் டெலனோ ரூசவெல்ட்டு]] 250,000 பார்வையாளர்கள் முன்னிலையில் "மங்கா ஒளி அமைதி நினைவகத்தை" திறந்து வைத்தார்.
 
மற்றொரு அமெரிக்கக் குடியரசுத் தலைவரான [[டுவைட் டி. ஐசனாவர்]] தமது ஓய்வுக்கால வசிப்பிடமாக கெட்டிசுபெர்க்கில் பண்ணை ஒன்றை 1950இல் வாங்கியுள்ளார். சோவியத் ஒன்றியத் தலைவர் [[நிக்கிட்டா குருசேவ்| நிக்கிட்டா குருசேவ்]] இங்கு 1959இல் விஜயம் செய்தார்.
 
==மேற்சான்றுகள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/கெட்டிசுபெர்க்கு,_பென்சில்வேனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது