"எவரிஸ்ட் கால்வா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
==கணிதமே உலகம்==
 
கால்வா 12 வயது வரையில் தன்னுடைய அன்னையிடமே இலக்கியங்களில் பழமைச் சிறப்பு பெற்ற நூல்களைப் படித்து வந்தார். 1823 இல் 12வது வயதில் [[பாரிஸ்]] நகரத்தில் லூயி லே கிராண்ட் என்ற பள்ளியில் சேர்ந்தார். பிரான்ஸ் நாட்டு மக்கள் அப்பொழுதும் புரட்சி நாட்களை மறக்கவில்லை. கால்வா தான் காதால் கேள்விப்பட்ட அடாவடிச் செயல்களை யெல்லாம் நேரில் பார்க்க ஆரம்பித்தார். படிப்பிலோ ஓரிரண்டு ஆண்டுகளில் கால்வா வினுடைய ருசியெல்லாம் கணிதத்தில் திரும்பியது. ஆனால் பள்ளியிலோ கணிதத்திற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் [[லெஜாண்டர்|லெஜாண்டரின்]] [[வடிவியல்]] இச்சிறுவன் வழியில் வந்தபோது அதை அனாயாசமாகப் படித்து முடித்தான். அவனுக்கு பள்ளியில் கிடைத்த [[இயற்கணிதம்|இயற்கணித]] புத்தகத்தில்லோ அவனுடைய கூர்மையான மூளைக்கு சவாலாக ஒன்றுமே இல்லை. லெஜாண்டரைக் கரைத்துக் குடித்தவன், [[லக்ராஞ்சி|லக்ராஞ்ஜையும்]] [[ஏபெல்]]லையும் படிக்க ஆரம்பித்தான். 14, 15 வயதே ஆன இச்சிறு பையன் கணிதவல்லுனர்களுக்காக இன்னும் பெரிய வல்லுனர்கள் எழுதியதை விழுங்கி சீரணித்துக்கொண்டிருந்தான். சமன்பாடுகளின் விடுவிப்புக் கணிப்புகள், Theory of analytic functions, Calculus of functions இவையெல்லாம் அவனை வெகுவாக ஈர்த்தன. மனதிலேயே அவன் பெரிய பெரிய கணிப்புகளைப் போடக்கூடியவன். ஆசிரியர்கள் தேர்வுகளில் கணிப்புக்காகக் கேட்கும் வழிகளெல்லாம் அவனுக்கு அனாவசியமாகப் பட்டது.கோபப்பட்டான். ஆனாலும் கணிதத்தில் என்னென்ன பரிசுகள் உண்டோ அத்தனையும் அவனுக்குத்தான். கணிதத்தில் அவனுக்கிருந்த அபார சக்தியை நம்பினவர்களும் இருந்தனர்; அதை நம்பாமல் அதெல்லாம் ஒரு நடிப்பு என்றவர்களும் இருந்தனர்.
 
==முதல் ஆய்வுக்கட்டுரை==
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/152908" இருந்து மீள்விக்கப்பட்டது