குருகை காவலப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
நாதமுனிகள் இவருக்கு அட்டாங்க யோகத்தில் பயிற்சி அளித்தார். தன் மகன் [[ஈசுவரமுனி]]க்குப் பிறக்கப்போகும் மகனுக்கு அட்டாங்க யோகப் பயிற்சி அளிக்குமாறு இவரை வேண்டிக்கொண்டு காலமானார். ஈசுவரமுனிக்குப் பிறந்த குழந்தைக்கு [[மணக்கால் நம்பி]] யமுனைத்துறைவன் எனப் பெயர் சுட்டி, எட்டெழுத்து மந்திரத்தைப் <ref>ஓம் நமோ நாராயணாய</ref> புகட்டினார். அட்டாங்க யோக மறையைக் குருகை காவலப்பனிடம் கற்றுத் தெளியுமாறு அறிவுறுத்தினார்.
 
யமுனைத்துறைவனாகிய ஆளவந்தார் குருகை காவலப்பனை வேண்டியபோது வருகிற தை மாதம் இன்ன நாளில் தாம் பரமபதம் செல்லவிருப்பதாகவும், அதற்கு முன் வேறொரு நாளில் வரும்படியும் எழுதியிருந்த ஓலை ஒன்றைக் காப்பிட்டுக் கொடுத்து பின்னொரு நாளில் படிக்கும்படி கூறி அனுப்பிவிட்டார். [[ஆளவந்தார்]] காஞ்சிபுரத்தில் சிலநாள் தங்கிவிட்டுத் திருவரங்கம் வந்து ஓலைக் காப்பை விலக்கிவிட்டுப் பார்த்தபோது, அது குருகை காவலப்பன் பரமபதம் அடையும் காலமாக இருந்தது. இவ்வாறு குருகை காவலப்பன் ஆசிரியர் இட்ட கட்டளையை நிறைவேற்றாமலேயே காலமானார்.
 
* இவர் பாடிய [[தனியன் (வைணவம்)|தனியன்]], [[பேயாழ்வார்]] பாடிய மூன்றாம் திருவந்தாதியைப் போற்றும் நேரிசை [[வெண்பா]]வாக அமைந்துள்ளது.
வரிசை 13:
:திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
:உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.
 
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, 2005
"https://ta.wikipedia.org/wiki/குருகை_காவலப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது