"புவியின் வளிமண்டலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (clean up)
No edit summary
'''புவியின் வளிமண்டலம்''' என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். இது ஐந்தில் நான்கு பங்கு [[நைட்ரஜன்|நைட்ரஜனையும்]], ஐந்தில் ஒரு பங்கு [[ஆக்ஸிஜன்|ஆக்ஸிஜனையும்]] மிகக் குறைந்த அளவில் [[கரியமில வாயு]] உட்பட்ட மேலும் பல வாயுக்களையும் கொண்டுள்ளது. சூரியக் [[கதிர் வீச்சு|கதிர்வீச்சிலிருக்கும்]] [[புறஊதாக் கதிர்கள்|புறஊதாக் கதிர்களை]] உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், [[பகல்]], [[இரவு]] நேரங்களுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகளைக் குறைப்பதன் மூலமும் வளிமண்டலம் [[பூமி]]யில் உயிர் வாழ்வைக் காத்து வருகிறது.
 
[[படிமம்:EdgeAtmosphere of Spacelayers-ta.pngsvg|thumb|right|175px|வளிமண்டலப் படலங்கள் (NOAA)]]
 
வளிமண்டலத்துக்குச் சடுதியாக முடிவடையும் ஒரு எல்லை கிடையாது. வளிமண்டலத்தின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து வந்து இல்லாமல் போய் விடுகிறது. வளிமண்டலத்துக்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை எதுவும் இல்லை. வளிமண்டலத்தின் முக்கால் பகுதித் [[திணிவு]] புவியின் மேற்பரப்பிலிருந்து 11 [[கிலோமீட்டர்]] தூரத்துக்குள் அடங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 80.5 கி.மீட்டர்களுக்கு மேல் செல்லும் எவரும் [[விண்வெளிவீரர்]]கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். விண்வெளியிலிருந்து திரும்பும் போது வளிமண்டலத்தின் பாதிப்புப் புலப்படத் தொடங்குமிடம் 120 கிமீ உயரத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது. 100 கிமீ உயரத்திலுள்ள [[கர்மான் கோடு]] எனப்படும் கோடும் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையாகக் கருதப்படுவதுண்டு.
46

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1531310" இருந்து மீள்விக்கப்பட்டது