அணுவடித்துகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 13:
கூட்டுத் துகள்கள் ([[நேர்மின்னி]] அல்லது [[அணுக்கரு]] போன்றவை) இரண்டு அல்லது பல அடிப்படைத் துகள்களின் கட்டுற்ற நிலைகள் ஆவன. எடுத்துக்காட்டாய் ஒரு நேர்மின்னி என்பது இரண்டு மேல் மற்றும் ஒரு கீழ் குவார்க்குகளின் கூட்டு ஆகும், அதே போல [[ஹீலியம்|ஹீலியம்-4]] அணுவின் கருவானது இரண்டு நேர்மின்னிகள் மற்றும் இரண்டு [[நொதுமி|நொதுமிகளினால்]] ஆனதாகும். கூட்டுத் துகள் என்பதில் அனைத்து [[ஹாட்ரான்|ஹாட்ரான்களும்]] அடங்கும்: இவையாவன (நேர்மின்னிகள் மற்றும் நொதுமிகள் போன்ற) [[பேரியான்|பேரியான்களும்]], ([[பையான்|பையான்கள்]] மற்றும் [[கேயான்|கேயான்கள்]] போன்ற) [[மீசான்|மீசான்களும்]] ஆகும்.
 
== துகள்கள் ==
[[துகள் இயற்பியல்|துகள் இயற்பியலில்]], துகள் பற்றிய கருத்தாக்கமானது [[இயற்பியல்#வரலாறு|செவ்வியல் இயற்பியலில்]] இருந்து பெறப்பட்ட பல கருத்தாங்களுள் ஒன்றாகும். இது [[குவாண்டம்_விசையியல்|குவாண்டம் விசையியலுக்கு]] உட்பட்ட அளவுகோல்களில், [[மூலக்கூறு]] போன்றவை, பருப்பொருளும் [[ஆற்றல்|ஆற்றலும்]] எவ்வாறு திகழ்கின்றன என்பதை விளக்குகிறது. குவாண்டம் அளவுகோல்களில் துகள் என்பவற்றின் இயக்கங்களும் பண்புகளும் பொதுவாய் (பெரிய அளவில் அறியப்படும் ''தூசி'' போன்ற) துகள் என்பவற்றிலிருந்து மிகவும் மாறுபட்டவை என்ற நவீன இயற்பியலின் புரிதல் காரணமாய் இயற்பியலாளர்களுக்கு ‘துகள்’ என்ற சொல் அதன் பொதுவான பொருளில் இருந்து மாறுபட்ட ஒரு பொருளை உணர்த்தும் ஒன்றாகும்.
 
வரிசை 20:
இக்கருத்தாக்கங்கள் அனைத்தின் உச்சகட்ட விளைவாய் தனிப்பட்டதான “துகள்கள்” என்ற கருத்தாக்கத்தின் இடத்தைத் தெளிவில்லாத வரையறை கொண்ட “[[அலைக் கட்டு|அலைக் கட்டுகள்]]” பிடித்துக்கொள்கின்றன - இவற்றின் பண்பளவுகள் புள்ளியியல் அளவில் மட்டுமே அறியப்படுவன, பிற “துகள்கள்” உடனான இவற்றின் இடைவினைகள் இன்றளவும் பெரும்பான்மையும் ஒரு புதிராகவே உள்ளது, குவாண்டம் இயக்கவியல் நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் ஆன நிலையிலும்.
 
== ஆற்றல் ==
[[ஐன்ஸ்டீனின்_பொருண்மை_-_ஆற்றல்_சமன்பாடு|ஐன்ஸ்டீனின் கொள்கையின்படி]] [[ஆற்றல்|ஆற்றலும்]] [[நிறை|நிறையும்]] ஒத்தவை: ஒரு துகளின் ஆற்றல் அதன் நிறை மற்றும் [[ஒளிவேகம்|ஒளியின் வேகத்தின்]] [[வர்க்கம்|வர்க்கத்தின்]] பெருக்கமாகும் ('''''E = mc<sup>2</sup>'''''). அதாவது நிறையை ஆற்றல் அடிப்படையிலும் ஆற்றலை நிறை அடிப்படையிலும் குறிக்கலாம். இதன் விளைவாய், ஆற்றலை இடம்பெயர்த்த இரண்டே இரண்டு இயக்க முறைகளே அறியப்படுகின்றன, அவை துகள்களும் அலைகளும் ஆகும். எடுத்துக்காட்டாய், ஒளியைத் துகள்களாக மற்றும் ஆற்றலாக என இரண்டு வகைகளிலுமே அலசலாம். இதுவே அலை-துகள் ஈரியல்பு முரண்தோற்றம் என்று அறியப்படுகிறது.
 
வரிசை 27:
துகள்களுக்கு இடையிலான வினைகள் பல நூற்றாண்டுகளாய் ஆராயப்பட்டு வருகிறது, துகள்கள் மோதல் வினைகளிலும் இடைவினைகளிலும் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதனை முடிவுசெய்யும் சில எளிய விதிகள் உள்ளன. இவ்விதிகளில் மிகவும் அடிப்படையானவை [[ஆற்றல் அழிவின்மை]] மற்றும் [[உந்தம்_அழியா_விதி|உந்தம் அழிவின்மை]] ஆகிய விதிகளாகும், இவ்விதிகளைக்கொண்டு [[விண்மீன்]] முதல் [[குவார்க்கு]] வரை எவ்வளவிலான துகள்களின் இடைவினைகளையும் கணிக்கலாம்.
 
== ஓர் அணுவைப் பகுத்தல் ==
ஒரு [[ஐதரசன்]] அணு ஒரு [[எதிர்மின்னி]] ஒரு [[நேர்மின்னி]] ஆகியவற்றின் கூட்டாகும். அதன் எதிர்மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரானின் நிறையானது ஒரு ஐதரசன் அணுவின் நிறையில் 1/1836 பங்கே ஆகும். ஐதரசன் அணுவின் மீத நிறை அதன் நேர்மின்னூட்டம் பெற்ற புரோட்டானால் வருவதாகும். ஒரு தனிமத்தின் [[அணுவெண்]] ஆவது அதன் [[அணுக்கரு|கருவில்]] உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை ஆகும். [[நொதிமி|நொதிமிகள்]] என்பன [[மின்னூட்டம்]] இல்லாத, புரோட்டானைவிட சற்றே கூடுதலான நிறைகொண்ட துகள்களாகும். ஒரே [[தனிமம்|தனிமத்தின்]] வெவ்வேறு [[ஓரிடத்தான்|ஓரிடத்தான்கள்]] ஒரே எண்ணிக்கையில் புரோட்டான்களையும் ஆனால் வெவ்வேறு எண்ணிக்கையிலான நொதுமிகளையும் கொண்டிருக்கும். ஒரு ஓரிடத்தானின் [[திணிவெண்|நிறையெண்]] ஆவது அதிலுள்ள அணுக்கருத் துகள்களின் (புரோட்டான் மற்றும் நொதிமி) கூட்டெண் ஆகும்.
 
மூலக்கூறுகள் மற்றும் [[படிமம்|படிமங்கள்]] போன்ற வடிவமைப்புகளில், எதிர்மின்னிகளைப் பகிர்ந்துகொள்ளல் மூலம் எவ்வாறு அணுக்கள் [[அணுப்பிணைவு|பிணைகின்றன]] என்பதைப் அலசுவது [[வேதியியல்|வேதியியலின்]] வேலை. ஒரு அணுக்கருவில் நேர்மின்னிகளும் நொதுமிகளும் எவ்வாறு தங்களை அமைத்துக்கொள்கின்றன என்பதைப் பற்றி [[அணுக்கரு இயற்பியல்]] அலசுகிறது. அணுவடித்துகள்கள், அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள், அவற்றின் அமைப்புகள் மற்றும் இடைவினைகள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்விற்கு [[குவாண்டம் விசையியல்|குவாண்டம் இயக்கவியல்]] தேவை. துகள்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளையே மாற்றக்கூடிய இயக்கவினைகளை அலச [[குவாண்டம் புலவிசைக் கோட்பாடு]] தேவைப்படும். அணுவடித்துகள்களைத் தனிப்பட்ட நிலையில் ஆராயும் துறைக்கு [[துகள் இயற்பியல்]] என்று பெயர். பொதுவாய் அதிக வகையிலான துகள்கள் [[அண்டக் கதிர்கள்|அண்டக் கதிர்களின்]] விளைவாகவோ அல்லது [[துகள் முடுக்கி|துகள் முடுக்கிகளிலோதான்]] வருகின்றன என்ற காரணத்தைக் கருதி துகள் இயற்பியலானது உயர்-ஆற்றல் இயற்பியல் என்றும் அழைக்கப்படுகிறது.
 
== வரலாறு ==
== வெளியிணைப்புகள் ==
*[http://particleadventure.org/frameless/standard_model.html particleadventure.org: The Standard Model.]
*[http://www.cpepweb.org/cpep_sm_large.html cpepweb.org: Particle chart.]
"https://ta.wikipedia.org/wiki/அணுவடித்துகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது