முதலாவது புக்கா ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: {{விஜயநகரப் பேரரசு}} புக்கா என அழைக்கப்படும் '''முதலாவது புக்கா ராயன்''' (க...
 
No edit summary
வரிசை 5:
புக்கா ராயனின் இருபத்தொரு ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் எல்லைகள் தொடர்ந்து விரிவடைந்து சென்றன. இவன் [[தென்னிந்தியா]]வின் பல அரசுகளைத் தோற்கடித்து அங்கெல்லாம் தனது கட்டுப்பாட்டை நிறுவினான். ஆற்காட்டுச் [[சம்புவரையர்|சம்புவரையரும்]], கொண்டவிடு ரெட்டிகளும் 1360 இல் புக்கா ராயனிடம் தோற்றனர். 1371 இல் மதுரையில் இருந்த [[சுல்தானகம்|சுல்தானகத்தைத்]] தோற்கடித்துப் பேரரசின் எல்லைகளை தெற்கே [[இராமேஸ்வரம்]] வரை விரிவாக்கினான். புக்கா ராயனின் மகனான [[குமார கம்பண்ணன்|குமார கம்பண்ணனும்]] இவனது படையெடுப்புக்களில் கலந்து கொண்டது பற்றி, இவனது [[மனைவி]]யான [[கங்காம்பிகா]]வினால் எழுதப்பட்ட [[மதுராவிஜயம்]] என்னும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] நூலில் விளக்கப்பட்டுள்ளது. 1374 ஆம் ஆண்டளவில், [[பஹ்மானி]]களுக்கு எதிராக [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை]] - [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா]] ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலத்தின் கட்டுப்பாடு தொடர்பில் இவனது பலம் அதிகரித்தது. இவன் [[கோவா]], [[ஒரிஸ்ஸா]] ஆகிய அரசுகளையும் கைப்பற்றினான். இலங்கையில் [[யாழ்ப்பாண அரசு]] மற்றும் மலபார் அரசுகளிடமிருந்து திறையும் பெற்றான்.
 
புக்காவின் ஆட்சிக்காலத்தில், இவன் [[பஹ்மானி சுல்தான்]]களுடனும் மோதியுள்ளான். முதல் தடவை [[முதலாவது முஹம்மத்]]தின் காலத்திலும், பின்னர் [[முஜாஹித்]]தின் காலத்திலும் மோதல்கள் நிகழ்ந்தன. இவன் [[சீனா]]வுக்கும் தூதுவர்களை அனுப்பியதாகத் தெரிகிறது. புக்கா கி.பி. 1380 ஆம் ஆண்டளவில் காலமானான். இவனைத் தொடர்ந்து [[இரண்டாம் ஹரிஹராஹரிஹர ராயன்]] ஆட்சிக்கு வந்தான். புக்காவின் காலத்திலேயே விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக [[விஜயநகரம்]] ஆகியது. துங்கபத்திரையின் தென்கரையில் இருக்கும் இது முன்னைய தலைநகரான [[அனகொண்டி]]யிலும் பாதுகாப்பானதாகும். இக்காலத்தில் நடைபெற்ற உள்நாட்டு முரண்பாடுகள், வெளி அரசுகளுடனான சண்டைகள் என்பவற்றுக்கு மத்தியிலும் புதிய நகரத்தை மேம்படுத்துவதில் புக்கா கவனம் செலுத்த முடிந்தது குறிப்பிடத் தக்கதாகும். பல இக்கியங்களும், சமய நூல்களும் இவன் காலத்தில் ஆக்கப்பட்டன. பல அறிஞர்கள், [[வித்தியாரண்யர்]], [[சாயனர்]] ஆகியோரின் வழிகாட்டல்களின் கீழ் இருந்து வந்தனர். [[வேதம்|வேதங்கள்]], [[பிராமணம்|பிராமணங்கள்]], [[ஆரண்யகம்|ஆரண்யகங்கள்]] முதலிய இந்து நூல்களுக்கான சாயனருடைய உரைகள், புக்காவின் ஆதரவிலேயே எழுதப்பட்டன.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாவது_புக்கா_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது