"ஹம்பிறி போகார்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,071 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
==திரைப்பட வாழ்க்கை==
அவரது முதல் படம் 'பெட்ரிஃபைடு ஃபாரஸ்ட்' 1936ல் வெளியானது.போகர்ட் 1942 இன் காஸபிளான்காவி்ல் 'ரிக் பிளெய்னெ' கதாபாத்திரத்தில் நடித்தார்.காஸாபிளான்கா 1943ல் சிறந்த படத்திற்கான அகாடமி விருதை வென்றது.இப்படம் அவரை ஸ்டுடியோ பட்டியலின் நான்காவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு கொண்டுசென்றது மற்றும் அவரது அவரது ஆண்டு சம்பளம் [[$]] 4,60,000 மேல் சென்றதுடன் உலகின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் நடிகராக ஆக்கியது.
 
பல்வேறு வேலைகளை செய்து பார்த்தபின், போகார்ட் 1921ஆம் ஆண்டு முதல் பிராட்வே நாடக தயாரிப்பு நிறுவனத்திற்காக தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இது 1920ம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டுவரை நிகழ்ந்தது. 1929ஆம் ஆண்டு பங்கு சந்தை சரிவிற்குப்பின் நாடகங்களுக்கான வரவேற்பு குறைய ஆரம்பித்தது. எனவே போகர்ட் திரைத்துறையின்பால் தனது கவனத்தை திருப்ப ஆரம்பித்தார். அவரது முதல் மாபெரும் வெற்றி அவரது டுயூக் மாண்டி கதாபாத்திரம். (பெட்ரிபைட் பாரஸ்ட் 1936), இது இவரை இதைப் போன்ற ஒரேமாதிரியான தாதா பாத்திரங்களை ஏற்று நடிக்கும் நிலைக்கு ஆளாக்கியது. ஏஞ்சல்ஸ் வித் டர்டி பேசஸ் 1938, (அசிங்கமுக தேவதைகள்), பி-மூவிஸ் வகை தி ரிடர்ன் ஆப் டாக்டர் எக்ஸ் (1939) போன்ற படங்களிலும் இவருக்கு தாதா பாத்திரங்களே அமைந்தன.
 
போகர்டிர்க்கான முன்னணி கதாபாத்திர வாய்ப்பு 1941ஆம் ஆண்டு, ஹை சியரா மற்றும் தி மால்டிஸ் பால்கன் என்கிற திரைப்படங்களின் மூலமே கிடைத்தது. அடுத்த ஆண்டு போகர்டின் நடிப்பாற்றல் காஸாபிளாங்கா திரைபடத்தில் முழுமையாக உணரப்பட்டது. இது அவரை திரைத்துறை உச்சத்தில் அமர்த்தியது. இவருடைய பாணியை அழுத்தமாய் ரசிகர்களிடம் பதிவிட்டது.
அது எதார்த்தமான, உணர்வுகள் இறுகிப்போன அழுத்தமான ஒரு நபராகவும் அதே வேளை உன்னதமான மறுபக்கத்தை கொண்ட ஒரு நபராகவும் இவரை காட்டியது.
 
தொடர்ந்து டு ஹாவ் அண்ட் ஹாவ் நாட்(1944);தி பிக் ஸ்லீப்(1946); டார்க் பாசேஜ்(1947) மற்றும் இவரது மனைவி லாரென் பாகல்லுடன் நடித்த தி டிரஷர் ஆப் தி சியரா மாடரே(1948); இந் எ லோன்லி பிளேஸ்(1950), தி ஆப்ரிகன் குவீன்(1951); இவர் பெற்ற ஒரே அகாடமி விருதினை இவருக்கு பெற்றுத்தந்த படம்;சாப்ரினா (1954). தி ஹார்டர் தே பால்(1956) இவரது கடைசிப் படம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு நீண்ட இவரது திரைவாழ்வில் இவர் எழுபத்தி ஐந்து படங்களில் நடித்திருந்தார்.
 
 
100

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1536420" இருந்து மீள்விக்கப்பட்டது