ஹம்பிறி போகார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
==ஆரம்ப வாழ்க்கை==
போகர்ட் நியூயார்க் நகரில், டாக்டர் பெல்மண்ட் டீஃபாரஸ்ட் போகர்ட் (ஜூலை 1867, வாட்கின்ஸ் கிளன், நியூ யார்க் - செப்டம்பர் 8,1934, டியூடர் நகர் அடுக்குமாடி குடியிருப்பு நியூ யார்க் நகர்) மற்றும் மௌட் ஹம்ப்ரேவுக்கு மூத்த குழந்தையாக கிறிஸ்துமஸ் தினத்தன்று, 1899 இல் பிறந்தார்.போகர்ட்டின் தந்தை, பெல்மண்ட், ஒரு இதய அறுவை சிகிச்சையாளர்.போகார்ட்டுக்கு இரண்டு இளைய சகோதரிகள், பிரான்செஸ் மற்றும் கேதரின் எலிசபெத் (கே).பெல்மாண்டும் மௌட் ஹம்ப்ரியும் ஜூன் 1898ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். போகர்ட் என்கிற பெயர் ஒரு டச் குடும்பப்பெயரில் இருந்து வந்தது. இது பூம்கார்ட் என்கிற டச் வார்த்தையை மூலமாக கொண்டது. இதன் பொருள் பழத்தோட்டம். போகர்டின் அப்பா ஒரு புனரமைக்கபட்ட கிறிஸ்துவ ப்ரெஸ்பைடீரியன், அம்மவோ ஆங்கில எபிஸ்கோபாலியன். போகார்ட் எபிஸ்கோபாலியன் நம்பிக்கையில் வளர்க்கப்பட்டார். ஆனால் இவரது இளமை பருவத்தின் பெரும்பாலும் இவர் இந்த இறை நம்பிக்கையை பின்பற்றவில்லை. போகர்ட் அவரது கடலைப் பற்றிய பேரார்வத்தால் 1918 வசந்த காலத்தில் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார்.
 
==பிறந்த நாள் சர்ச்சைகள்==
போகர்டின் பிறந்தநாள் சர்ச்சைக்கு உரியதாக இருக்கிறது; வார்னர் பிரதர்ஸ் போகர்ட் 1899ஆம் ஆண்டு கிருஸ்துமஸ் தினத்தில் பிறந்ததவர் என்று சொல்கிறது. சிலர் இது இந்த நிறுவனம் தனது நட்சத்திர நடிகரை கவர்ச்சிகரமாக முன்னிறுத்த செய்த ஒரு கட்டுக்கதை என்று நம்புகிறார்கள். இவர்கள் போகர்ட் ஜனவரி 23,1899இல் பிறந்தவர் என்றும் கூறுகிறார்கள். இருந்தாலும் இவர்களின் நம்பிக்கை ஆதரமற்றது என்று கருதப்படுகிறது. போகர்டின் உண்மையான பிறப்பு சான்றிதழ் கிடைக்கவே இல்லை எனினும் அவரது பிறப்பு அறிவிப்பு ஒரு 1900ஆம் ஆண்டின் நியூயார்க் செய்தித்தாளில் ஜனவரி முதல்வாரதில் வந்திருகிறது. இது இவர் 1899ம் ஆண்டு டிசம்பரில் பிறந்திருப்பதை உறுதி செய்யும் வண்ணம் உள்ளது. மேலும் 1900ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பையும் வைத்து இவர் 1899ல் பிறந்தவர் என்று முடிவுக்கு வரலாம்.
 
போகர்டின் தந்தை ஒரு இதய மற்றும் நுரையீரல் அறுவைநிபுணர். இவரது தாயார், மௌட் ஹம்ப்ரி தொழில்முறை ஓவியர், இவர் தனது ஓவிய பயிற்சியை நியூயார்க்கிலும் பிரான்சிலும் பெற்றார். இவருடன் பயின்ற ஜேம்ஸ் மெக்நீல் விசிலர் பின்பு தி டீலியநேட்டர் எனும் பாசன் சஞ்சிகையின் கலை இயக்குனராக பணியாற்றினார். இவர் பெண்களின் வாக்குரிமைக்காக பணியாற்றிய ஒரு அதிதீவிர போராளி என்பது குறிப்பிடத்தக்கது.
 
==திரைப்பட வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/ஹம்பிறி_போகார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது