"ஹம்பிறி போகார்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,365 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
போகர்டின் தந்தை ஒரு இதய மற்றும் நுரையீரல் அறுவைநிபுணர். இவரது தாயார், மௌட் ஹம்ப்ரி தொழில்முறை ஓவியர், இவர் தனது ஓவிய பயிற்சியை நியூயார்க்கிலும் பிரான்சிலும் பெற்றார். இவருடன் பயின்ற ஜேம்ஸ் மெக்நீல் விசிலர் பின்பு தி டீலியநேட்டர் எனும் பாசன் சஞ்சிகையின் கலை இயக்குனராக பணியாற்றினார். இவர் பெண்களின் வாக்குரிமைக்காக பணியாற்றிய ஒரு அதிதீவிர போராளி என்பது குறிப்பிடத்தக்கது. மெலின்ஸ் குழந்தை உணவின் யாவரும் அறிந்த ஒரு தொடர் விளம்பர நிகழ்விற்க்காக இவர் ஹம்ப்ரியின் குழந்தை படத்தை பயன்படுத்தினார். இவர் தனது தொழிலின் உச்சத்தில் இருந்த பொழுது ஒரு ஆண்டுக்கு 50,000 டாலர்களை ஈட்டினர். இது அவர்காலத்தில் ஒரு மாபெரும் தொகை. இவரது கணவர் 20.000ஆயிரம் டாலர்களை மட்டுமே ஈட்டினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. போகர்டின் குடும்பம் ஒரு அப்பர் வெஸ்ட் சைட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தது. இவர்களுக்கு அப்பர் நியூயார்க்கில் கனன்டைகுவா ஏரியில் ஒரு 55 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு காட்டேஜும் இருந்தது. ஹம்ப்ரியின் இளம் பருவத்தில் தனது நண்பர்கள் பட்டாளத்துடன் இந்த ஏரிக்கரையில் நாடகங்களை நடிப்பார்.
 
ஹம்ப்ரி குடும்பத்தின் மூத்தமகன் இவருக்கு இரண்டு தங்கைகள் இருந்தனர். இவர்களின் முதல் சகோதரி பிரான்சஸ் மூன்றாவது சகோதரி காதரின் எலிசபத் (கே). இவரது பெற்றோர் ரொம்ப சீரான வாழ்க்கை முறையை கொண்டவர்கள். இருவரும் தங்கள் துறைகளில் மூழ்கியிருந்தனர். அடிக்கடி ஒருவரோடு ஒருவர் சச்சரவிட்டுக் கொண்டிருந்தனர். இதனை அவர்கள் குழந்தைகள் மீதும் பிரதிபலித்தனர். "நான் உணர்வுரீதியாக வளர்க்கப்படவில்லை ஆனால் மிக நேர்மையாக வளர்க்கப்பட்டேன், எங்கள் குடும்பத்தில் முத்தம் ஒரு அரிதான நிகழ்வு.
 
போகர்ட் சிறுவனாக இருந்த போது அவருடைய சுருட்டை முடிக்காகவும், நேர்த்திக்காகவும், அவரது அம்மா அவரை வரைந்த லிட்டில் லார்ட் பான்ட்லாரி ஆடை விளம்பரங்களுக்கான படங்களுக்காகவும் கேலி செய்து வேறுப்பேற்றினர். தனது தந்தையிடம் இருந்து போகர்ட் ஊசி போடுவதையும், மீன் பிடிக்கும் ஆர்வத்தையும், வாழ்நாள் முழுதும் அவர் வெகுவாக விரும்பிய படகோட்டுதலையும், உறுதியான மனப்பாங்குள்ள பெண்களை விரும்புவதையும் பெற்றார்.
 
==திரைப்பட வாழ்க்கை==
100

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1537043" இருந்து மீள்விக்கப்பட்டது