"சுரோடிங்கர் சமன்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,563 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
===காலம்சாரா சமன்பாடு===
[[File:StationaryStatesAnimation.gif|300px|thumb|right|இந்த மூன்று வரிகளில் உள்ளவை ஒவ்வொன்றுமே ஒரு அலைப்பண்புருவாகும், இவை ஒரு சீரிசை அலைவியின் காலம்சார் சுரோடிங்கர் சமன்பாட்டில் பொருந்தும் விடைகளாகும். இடம்: அலைப்பண்புருவின் மெய்க்கூறு (நீலம்) மற்றும் கற்பனைக்கூறு (சிவப்பு). வலம்: இந்த அலைப்பண்புருக்களைக் கொண்ட ஒரு துகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காண்பதற்கான நிகழ்தகவு விரவல். முதல் இரண்டு வரிகளும் நிலையலைகளைக் குறிக்கும் மாறில் நிலைகளுக்கான எடுத்துக்காட்டுகள். கீழே மூன்றாவதாய் உள்ளது நிலையாக இல்லாத ஒரு நிலைக்கான எடுத்துக்காட்டு. இவற்றின் நிகழ்தகவு விரவல் (வலது பத்தி) மாறில் நிலைகள் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.]]
 
அலைப்பண்புருக்கள் நிலையலைகளை உருவாக்க இயலும் என்று காலம்சார் சுரோடிங்கர் சமன்பாடு கணிக்கின்றது, இவை மாறில் நிலை என அறியப்படும் (”அலைமண்டலங்கள்” அல்லது “சுழற்தடங்கள்” எனவும் அழைக்கப்படும், அணு சுழற்தடங்கள் அல்லது மூலக்கூறு சுழற்தடங்கள் போன்று). இந்த மாறில் நிலைகள் தங்களுக்கே உரிய வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும், இவற்றை வகைப்படுத்திப் புரிந்துகொள்வதன் மூலம் எந்தவொரு நிலையின் காலம்சார் சுரோடிங்கர் சமன்பாட்டினையும் எளிதாய் தீர்த்துவிட இயலும். காலம்சாரா சுரோடிங்கர் சமன்பாடு என்பது இந்த மாறில் நிலைகளை விவரிக்கும் சமன்பாடு ஆகும். (ஹாமில்டோனிய பணியுரு காலச்சார்பு அற்றதாய் இருக்கும் நிலையில் மட்டுமே இது பயன்படும்.)
 
{{Equation box 1
|indent=:
|title='''காலம்சாரா சுரோடிங்கர் சமன்பாடு''' (''பொதுவான வடிவம்'')
|equation=<math>E\Psi=\hat H \Psi</math>
|cellpadding
|border
|border colour = #50C878
|background colour = #ECFCF4}}
 
இச்சமன்பாட்டைச் சொற்களில் உரைப்பதானால் இவ்வாறு உரைக்கலாம்:
::ஹாமில்டோனிய பணியுரு, Ψ என்ற ஒரு குறிப்பிட்ட அலைப்பண்புருவின் மீது பணியாற்றுகையில் அதன் விளைவு Ψ என்ற அந்த அலைப்பண்புருவின் விகிதசமமாகவே இருக்குமானால், அந்த அலைப்பண்புரு Ψ ஒரு மாறில் நிலையாகும், மேலும் அதன் விகிதத் தொடர்பு மாறிலியான E என்பதே அந்த நிலையின் ஆற்றல் ஆகும்.
 
 
[[பகுப்பு:குவாண்டம் இயற்பியல்]]
367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1538062" இருந்து மீள்விக்கப்பட்டது