"சுரோடிங்கர் சமன்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,595 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
===அளத்தலும் அறுதியின்மையும்===
மரபார்ந்த இயற்பியலில் ஒரு பொருள் (அல்லது துகள்), எல்லாத் தருணத்திலும், ஒரு துல்லியமான இடமும் ஒரு துல்லியமான உந்தமும் கொண்டிருக்கும். அப்பொருள் நியூட்டனின் இயக்க விதிகளுக்கு உட்பட்டு நகர்கையில் அதன் இடம் மற்றும் உந்த மதிப்புகளும் நிர்ணயிக்கப்பட்ட முறையில் மாறும். குவாண்டம் இயற்பியலில் பொருட்களுக்கு துல்லியமாக கணக்கிடப்பட்ட பண்பு மதிப்புகள் இருப்பதில்லை, அப்பண்புகள் அளந்தறியப்படும் வேளையில் அவற்றிற்கான மதிப்பு ஒரு நிகழ்தகவு விரவலில் இருந்து [[சமவாய்ப்பு_மாறி|ஏதாவதொரு]] மதிப்பாக பெறப்படுகிறது. சுரோடிங்கர் சமன்பாடு, குறிப்பிட்ட அமைப்பின் குறிப்பிட்ட பண்புகளுக்கான அந்த நிகழ்தகவு விரவல் எது என்பதைக் கணித்துத் தருகிறது, ஆனால் அடிப்படையில் அதனால் ஒரு பண்பினது ஒவ்வொரு அளத்தலுக்குமான துல்லியமான மதிப்பைக் கணிக்க இயலாது.
 
குவாண்டம் இயங்கியலில் இயல்பாகவே அமைந்துள்ள இந்த அளவைகளின் துல்லியமற்றத்தன்மையின் கூற்றுதான் ஹெய்சன்பர்க்கின் [[அறுதியின்மைக் கொள்கை]] என்பதாகும். இதன்படி ஒரு துகளின் இருப்பிடம் எந்தளவிற்குத் துல்லியமாக அறியப்படுகிறதோ அந்தளவிற்கு அதன் உந்தத்தை அளப்பதில் துல்லியமற்ற தன்மை இருக்கும், அவ்வாறே மாற்றி உரைத்தும் கொள்க.
 
சுரோடிங்கர் சமன்பாடு ஒரு துகளின் (அல்லது அமைப்பின்) அலைப்பண்புருவின் (நிர்ணயிக்கப்பட்ட) காலம்சார் மாற்றத்தை விவரிக்கின்றது. எத்தனைதான் அலைப்பண்புரு துல்லியமாக அறியப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட பண்பை அறிய அதன் மீது நிகழ்த்தப்படும் அளவையின் விடை துல்லியமற்றதாகவே இருக்கும்.
 
===குவாண்டம் புரையூடல்===
===துகள்களை அலைகளாக கருதுதல்===
367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1538128" இருந்து மீள்விக்கப்பட்டது