சுரோடிங்கர் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 113:
 
===துகள்களை அலைகளாக கருதுதல்===
[[File:Double-slit experiment results Tanamura 2.jpg|175px|left|thumb|ஒரு இரட்டைப் பிளவு சோதனையில் நேரம் செல்லச் செல்ல திரையில் எதிர்மின்னிகள் திரள்வதைக் காட்டும் படம்.]]
சார்பியற்சாரா சுரோடிங்கர் சமன்பாடானது அலைச் சமன்பாடு என்று அறியப்படும் ஒரு வகை பகுதி வகையீட்டுச் சமன்பாடு ஆகும். இதனால் அலைகளுக்கு உரிய இயல்புகளைத் துகள்களும் வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. மிக அண்மைக்கால விளக்கங்களில் இந்த விவரம் நேரெதிராக சொல்லப்படுகிறது - குவாண்டம் நிலை, அதாவது அலைத்தன்மை, ஒன்றே உண்மையான இயற்பிய மெய்ந்நிலை, பொருத்தமான சூழல்களில் அது துகள் போன்ற இயல்புகளையும் வெளிப்படுத்தக் கூடியது.
 
அலைகள் அடிக்கடி காட்டும் இயல்புகளுக்கான ஒரு பிரபலமான எடுத்துக்காட்டு இரட்டைப் பிளவு விளிம்பு வளைவு ஆகும், இயல்பில் இவ்விளைவோடு துகள்களை இணைத்துப் பார்க்க இயலாது. இரண்டு பிளவுகளின் வாயிலாக வெளிவரும் அலை பிரிவுகள் ஒன்றாய்ப் படர்கையில் சில இடங்களில் ஒன்றை ஒன்று நீக்கியும் சில இடங்களில் ஒன்றோடு ஒன்று சேர்ந்தும் ஒரு சிக்கலான படிவத்தினை உருவாக்கும். பொதுவாய், ஒரு துகளை இரட்டைப் பிளவுகளை நோக்கி எறிவதன் மூலம் இவ்வாறான சிக்கலான படிவத்தை யாரும் எதிர்ப்பார்க்க இயலாது, காரணம் அந்தத் துகள் இரண்டு பிளவுகளில் ஏதேனும் ஒன்றன் வழியாகத்தான் செல்ல இயலும், இரண்டுன் ஊடாகவும் அதனால் செல்ல இயலாது.
 
ஆனால், சுரோடிங்கர் சமன்பாடு ஒரு அலைச் சமன்பாடு என்பதனால் அதன்படி இரட்டைப் பிளவை நோக்கி எறியப்படும் ஒரு தனித் துகள் அலைகள் உருவாக்குவது போன்ற ஒரு சிக்கலான படிவத்தையே தானும் உருவாக்கும் (இடப்புறம் உள்ள படம்). இந்தச் சிக்கலான படிவத்தினைப் பெற சோதனையைப் பலமுறை நிகழ்த்த வேண்டும். இந்தப் படிவம் தோன்றுதல் ஒவ்வொரு எதிர்மின்னியும் ஒரே நேரத்தில் இரண்டு பிளவுகள் வழியாகவும் செல்கின்றன என்பதற்கான சான்று ஆகும். இது உள்ளுணர்விற்கு எதிராய் தோன்றினாலும் இதுவே சரியான கணிப்பு ஆகும், குறிப்பாய் எதிர்மின்னி மற்றும் நொதுமியின் விளிம்புவளைவுகள் நன்கு புரிந்துகொள்ளப்பட்டு பல அறிவியல் துறைகளிலும் பரவலாக பயன்கொள்ளப்படுகின்றன.
 
விளிம்பு வளைவைப் போலவே துகள்கள் மேற்பொருந்தல் மற்றும் குறுக்கீட்டுவிளைவு ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன.
 
மேற்பொருந்தல் பண்பு ஒரு துகள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட நிலைகளில் வெவ்வேறு மரபார்ந்த (அறுதியான) பண்பு மதிப்புகளோடு ஒரு குவாண்டம் மேற்பொருந்தல் நிலையில் இருக்க அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டய், ஒரு துகள் ஒரே நேரத்தில் பல ஆற்றல் மதிப்புகளைக்கொண்டு இருக்கலாம், அதே போல் பல்வேறு இடங்களிலும் அத்துகள் ஒரே நேரத்தில் இருக்கலாம். மேலே உள்ள எதிர்மின்னி விளிம்புவளைவு எடுத்துக்காட்டில், ஒரு துகள் ஒரே நேரத்தில் இரண்டு பிளவுகளின் வழியாகவும் செல்லக் கூடியதாய் இருக்கிறது. பல நிலைகள் மேற்பொருந்தி இருந்தாலும் அந்த மேற்பொருந்தி இருக்கும் நிலையானது ஒரே ஒரு குவாண்டம் நிலையே ஆகும், இது மரபார்ந்த உள்ளுணர்வுக்கு ஒத்துப்போகத ஒன்றாய் இருந்தாலும் இது சோதனைகளால் உறுதி செய்யப்படுகிறது.
 
{{multiple image
| align = center
| direction = horizontal
| footer = ஒற்றைப் பரிமாணத்தில் டி பிராகிளி அலைகளின் செலவு - சிக்கலெண் வீச்சின் மெய்க்கூறு நீலத்திலும், கற்பனைக்கூறு சிவப்பிலும் காட்டப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட இடப்புள்ளியில் (''x'') துகளைக் காண்பதற்கான நிகழ்தகவு (நிறத்தின் அடர்த்தியால் இதன் மதிப்பு காட்டப்பட்டுள்ளது) ஒரு அலைவடிவில் பரவியுள்ளது; துகளுக்கு அறுதியிட்ட இருப்பிடம் எதுவும் இல்லை.
| image1 = Propagation of a de broglie plane wave.svg
| caption1 = தள அலை
| width1 = 250
| image2 = Propagation of a de broglie wavepacket.svg
| caption2 = அலைக்கட்டு
| width2 = 250
}}
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுரோடிங்கர்_சமன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது