இசுலாமிய வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 81:
{{Main|முகம்மது நபிக்கு பின்னரான ஆட்சி|கிலாபத்}}
 
முகம்மது நபியின் மரணத்தை தொடர்ந்து இசுலாமிய அரசு பல கலீபாக்களால் ஆட்சி செய்யப்பட்டது: [[அபூபக்ர் சித்தீக்]] (632-634), [[உமர் இப்னு கத்தாப்]] (1ம் உமர், 634-644), [[உதுமான் இப்னு அப்வான்]] (644-656), [[அலி இப்னு அபீதாலிப்]] (656-661). [[சுன்னிசன்னி முஸ்லிம்கள்]] இந்நால்வரையும் நேர்வழிநின்ற கலீபாக்கள் என்று பொருள்படும் "[[ராஷிதூன் கலீபாக்கள்|கலீபதுர் ராஷிதூன்]]" என்று அழைக்கின்றனர். இவர்களின் காலப்பகுதியிலேயே [[பாரசீகம்]], [[எகிப்து]], [[மத்திய கிழக்கு நாடுகள்]] மற்றும் வட ஆபிரிக்க நாடுகள் என்பன கைப்பற்றப்பட்டன. மேலும் கலீபா உதுமான் இப்னு அப்வானினால் 650ற்கும் 656ற்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் [[குர்ஆனின் வரலாறு|குர்ஆன் முழுமையான புத்தகவடிவில்]] தொகுக்கப்பட்டது. பின்பு அதன் பிரதிகள் விரிவடைந்து செல்லும் இசுலாமிய சாம்ராஜ்ஜியத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது <ref>Schimmel, Annemarie; Barbar Rivolta (Summer, 1992). "Islamic Calligraphy". The Metropolitan Museum of Art Bulletin, New Series 50 (1): 3.</ref>. எனினும் இசுலாமிய சாம்ராஜ்ஜியதில் ஏற்பட்ட பிரிவினைகள் இறுதி இரு ராஷிதூன் கலீபாக்களும் கொலை செய்யப்பட காரணமானது. இதில் கலீபா உதுமானின் கொலையை தொடர்ந்து அலீயின் ஆட்சியுரிமை தொடர்பான பிணக்கு இசுலாமிய வரலாற்றில் [[முதலாம் பித்னா]] என்று அழைக்கப்படும் உள்நாட்டுப் போரிற்கு வழிகோலியது. கலீபா அலீயின் மரணத்துடன் ராஷிதூன் கலீபாக்களின் காலப்பகுதி முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து [[முதலாம் முஆவியா|1ம் முஆவியா]] ஆட்சிபீடமேறினார் <ref name="EB-Chisholm">The Encyclopædia Britannica by Hugh Chisholm. [http://books.google.com/books?id=L0UbAQAAMAAJ&pg=PA28 Page 28]</ref>. இதிலிருந்து [[உமைய்யாக்கள்|உமைய்யாக்களின் ஆட்சி]] ஆரம்பமானது.
 
====உமையா கலீபகம்====
வரிசை 151:
:::''Consult particular article for details''
 
முஆவிய டமஸ்கஸை அழகானதொரு நகரமாக மாற்றினார். மேலும் இசுலாமிய பேரரசின் எல்லைகளை ஒரு கட்டத்தில் [[கொன்ஸ்தாந்திநோபிள்]] வரைக்கும் விரிவுபடுத்தினார். எனினும் [[அனடோலியா|அனடோலியாவை]] அண்டியிருந்த பகுதிகளை அவரால் தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. [[சுன்னிசன்னி முஸ்லிம்கள்]] இவரை உள்நாட்டு யுத்ததினை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பநிலையிலிருந்து முஸ்லிம் தேசத்தினை மீட்டெடுத்து அதன் இஸ்திரத்தன்மைக்கு உதவியவராக கருதியபோதும் [[சீயா முஸ்லிம்கள்]] இவரால்தான் அப்போர் ஆரம்பித்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். அத்தோடு தனது அதிகாரத்தை தக்கவைப்பதற்காக பல விடயங்களை இட்டுக்கட்டியதாகவும் <ref>[http://www.answering-ansar.org/answers/muawiya/en/chap8.php answering-ansar.org. ch 8.]</ref> நபியின் குடும்பத்தவர் பற்றி தவறாக கதை பரப்பியதாகவும் <ref>[http://www.answering-ansar.org/answers/muawiya/en/chap7.php answering-ansar.org. ch 7.]</ref> தன்னை எதிர்த்தவர்களை பைசாந்தியப் பேரரசில் அடிமையாக விற்றதாகவும் முஆவியாமீது சீயாக்கள் குற்றம் சுமத்துகின்றனர் <ref>Kokab wa Rifi Fazal-e-Ali Karam Allah Wajhu, Page 484, By Syed Mohammed Subh-e-Kashaf AlTirmidhi, Urdu translation by Syed Sharif Hussein Sherwani Sabzawari, Published by Aloom AlMuhammed, number B12 Shadbagh, Lahore, 1 January 1963. Page 484.</ref>. முஆவியாவினை பொறுத்தவரை மகன் யஸீதை அவரைத் தொடர்ந்து ஆட்சியாளராக பிரகடனம் செய்தது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது.
 
முஆவியாவினை தொடர்ந்து ஆட்சிபீடமேறிய [[யஸீத்|யஸீதின்]] காலப்பகுதியிலே முஸ்லிம்கள் பல பின்னடைவுகளை சந்தித்தனர். 682ம் ஆண்டில் யஸீத் [[உக்பா இப்னு நபி|உக்பா இப்னு நபியை]] வட ஆபிரிக்காவின் ஆளுநராக நியமித்தார். உக்பா [[பெர்பர்|பெர்பர் இனத்தவர்களுடனும்]] பைசாந்தியர்களுடனான பல யுத்தங்களை வெற்றி கொண்ட போதும் உக்பாவும் அவரது படையினரும் பிஸ்க்ரா என்ற இடத்தில் கைஸலா தலைமையிலான பெர்பெர் படையினால் பதுங்கியிருந்து நடத்தப் பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பெர்பெர்கள் முஸ்லிம் படையினரை வட ஆபிரிக்காவிலிருந்து விரட்டியடித்தனர் <ref>History of the Arab by Philip K Hitti</ref><ref>History of Islam by prof.Masudul Hasan</ref><ref>The Empire of the Arabs by sir John Glubb</ref>. மேலும் உமையாக்கள் கடலில் தங்களுக்கிருந்த ஆதிக்கத்தையும் இழந்தனர். இதன் காரணமாக ரொட்ஸ் மற்றும் க்ரீட் தீவுகளையும் கைவிட வேண்டியேற்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது