"சுரோடிங்கர் சமன்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

941 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சுரோடிங்கர் சமன்பாடு ஒரு அமைப்பிற்கு சாத்தியமான அலைப்பண்புருக்களைக் கணக்கிடவும், அவை காலத்தைப் பொறுத்து எவ்வாறு இயக்கஞ்சார்ந்து மாறுபடுகின்றன என்பதையும் அறியவும் ஒரு வழிமுறையை அளிக்கிறது. ஆனால் அதே சுரோடிங்கர் சமன்பாடு நேரடியாகவும் துல்லியமாகவும் அலைப்பண்புரு என்றால் என்ன என்று உரைக்கவில்லை. குவாண்டம் இயக்கவியலுக்கான விளக்கங்கள் அலைப்பண்பு, அதன் அடிப்படையான உண்மை மற்றும் இவை சார்ந்த ஆய்வுகளின் அளவைகள் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகாண முயல்கின்றன.
 
இதன் ஒரு முக்கிய பாங்கு சுரோடிங்கர் சமன்பாட்டிற்கும் [[அலைப்பண்புரு நொறுங்குதல்நொறுக்கம்|அலைப்பண்புரு நொறுங்குதலுக்கும்]] இடையிலான தொடர்பு ஆகும். பழைய கோப்பன்னாகன் விளக்கத்தில், துகள்கள் பொதுவில் சுரோடிங்கர் சமன்பாட்டையே பின்பற்றும், அலைப்பண்புரு நொறுக்கம் நிகழ்வதற்கு முன்புவரை, அலைப்பண்புரு நொறுங்கினால் அவை முற்றிலும் வேறு வகையில் நடந்துகொள்ளும். [[குவாண்டம் பிணைப்பிழைப்பு|குவாண்டம் பிணைப்பிழைப்புக் கோட்பாட்டின்]] வருகை (எவரெட் என்பவரின் [[பல்-உலகு விளக்கம்]] மற்றும் [[இசைவுறு வரலாறுகள்]] போன்ற) மாற்று அணுகுமுறைகளுக்கு வழிவகுத்தது, இவை எப்பொழுதுமே சுரோடிங்கரின் சமன்பாட்டைப் பொருந்தியே இருக்கும், மேலும் அலைப்பண்புரு நொறுக்கம் சுரோடிங்கர் சமன்பாட்டின் ஒரு தொடர்விளைவாகவே விளக்கப்பட வேண்டும்.
 
==வரலாற்றுப் பின்புலமும் சமன்பாட்டை அமைத்தலும்==
367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1538317" இருந்து மீள்விக்கப்பட்டது